News August 8, 2025
குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியல்

தென்காசி மாவட்டத்தில் சுற்றுலாத் தளமாக விளங்கிவரும் குற்றால அருவிகளில் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழுந்து வருகிறது. தற்போது சீசன் இறுதி கட்டத்தை எட்டும் நிலைக்கு சென்றுள்ளது. இருப்பினும் அதிகாலை முதலே சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குற்றாலம் பகுதிகளுக்கு வருகை புரிந்து குற்றால அருவிகளில் உற்சாகமாக குளித்தனர்.
Similar News
News August 8, 2025
தோரணமலை முருகன் கோயிலில் நாளை கிரிவலம்

கடையம் அருகே அமைந்துள்ள தேரையர், சித்தர், அகத்தியர் வழிபட்ட தோரணமலை முருகன் கோயில் ஆடி மாத பெளர்ணமி கிரிவலம் நாளை காலை 6 மணி முதல் நடைபெறும். இந்த கிரிவலப்பாதையை வலம் வருவதற்கு சுமார் 1.15 மணி நேரம் ஆகும். அதனைத் தொடர்ந்து காலையும், மதியமும் அண்ணதானம் நடைபெறும்.
News August 8, 2025
தென்காசி மருத்துவமனையில் தாய்ப்பால் வார விழா

தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் இந்திய குழந்தை மருத்துவ குழுமம் மற்றும் தமிழ்நாடு மாநில பிரிவு இணைந்து நடத்தும் உலக தாய்ப்பால் வார விழா-2025 ஆகஸ்ட் முதல் வாரத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய விழாவில் மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில், தாய்ப்பால் வார விழாவின் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
News August 8, 2025
தென்காசி அரசு மருத்துவமனைகளில் வேலை

தென்காசி மாவட்ட நலச்சங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் அரசு மருத்துவமனைகளில் ஆலோசகர் (யோகா & இயற்கை மருத்துவம்), உதவியாளர் பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதி: 8th, B.Sc, Diploma ரூ.10,000 முதல் ரூ.40,000 வரை சம்பளம். விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஆகஸ்டு 20க்குள் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு <