News April 6, 2024
ஸ்டாலின் மைத்துனர் காலமானார்

முதல்வர் ஸ்டாலினின் மைத்துனர் லெனின், உடல்நலக் குறைவால் காலமானார். திமுகவின் அங்கமாக இருந்து வந்த லெனின் கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். சென்னை திருமங்கலத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அமைச்சர் உதயநிதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிச் சென்றார்.
Similar News
News August 12, 2025
விவசாயிகளை திமுக பழிவாங்குகிறது: இபிஎஸ்

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக அரசு விவசாயிகளைப் பழி வாங்குவதாக இபிஎஸ் குற்றம் சுமத்தியுள்ளார். ராயக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் பேசிய அவர், பெங்களூரு சென்று மலர்களை விற்பதை தடுக்கும் வகையில் ₹20 கோடியில் சர்வதேச ஏல மையத்தை கடந்த அதிமுக ஆட்சியில் இப்பகுதியில் அமைத்தோம், ஆனால் தற்போது அது பூட்டிக்கிடப்பதாகவும், அரசியல் காழ்ப்புணர்ச்சியே இதற்கு காரணமெனவும் தெரிவித்துள்ளார்.
News August 12, 2025
இல.கணேசனுக்கு 3வது நாளாக தீவிர சிகிச்சை

நாகாலாந்து கவர்னர் இல.கணேசனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆக. 8-ம் தேதி வீட்டில் வழுக்கி விழுந்ததால் தலையில் காயமடைந்த அவர், சென்னை அப்போலோ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ICU-வில் 3-வது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டாக்டர்கள் குழுவினர் இல. கணேசனின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவரது உடல்நிலை குறித்த அறிக்கை விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
News August 12, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஆகஸ்ட் 12) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.