News August 8, 2025
சேலத்தில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

சேலத்தில் நாளை(ஆக.9) ’உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்: ▶️ சூரமங்கலம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி ▶️உடையாப்பட்டி ஸ்ரீ சேக்கிழார் திருமண மண்டபம் உடையாபட்டி ▶️மேட்டூர் சிவகாம சுந்தரி திருமண மண்டபம் மேட்டூர் ▶️தலைவாசல் ஸ்ரீ அன்னபூர்ணா திருமண மண்டபம் கோவிந்தன் பாளையம்▶️ நங்கவள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வீரனூர் ▶️ஓமலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி காமலாபுரம்
Similar News
News August 8, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

சேலம் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 8) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். அவசர உதவிக்கு மாவட்ட கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.
News August 8, 2025
சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

தெற்கு கடலோர ஆந்திர பிரதேசத்தில் இருந்து, கடலோர தமிழகம் வழியாக வடக்கு இலங்கை வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வட தமிழகத்தில் நாளை (ஆக.9) தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது, என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
News August 8, 2025
சேலம் மாவட்டத்தில் போலி ஸ்காலர்ஷிப் மோசடி எச்சரிக்கை!

சேலம் மாவட்டத்தில் அறிமுகமில்லாதவர்கள் தொடர்பு கொண்டு, குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி QR குறியீட்டை ஸ்கேன் செய்து PIN எண்ணை சொல்லும் மோசடிகள் நடைபெறுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கி கணக்கிலிருந்து பணம் திருடப்படும் அபாயம் உள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆன்லைன் நிதி மோசடி புகார்களுக்கு 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.