News August 8, 2025

SK-வின் 2 புதிய படங்களுக்கு இசையமைக்கும் சாய்

image

‘பராசக்தி’, ‘மதராஸி’ படங்களில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ‘குட்நைட்’ பட இயக்குநர் விநாயக் சந்திரசேகர் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அதைத்தொடர்ந்து ‘டான்’ பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளாராம். இந்த 2 படங்களுக்கும் சாய் அபயங்கர் தான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த 2 படங்களையும் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

Similar News

News August 8, 2025

விநாயகர் சதுர்த்தி.. இவற்றுக்கெல்லாம் தடை!

image

விநாயகர் சதுர்த்தி (ஆகஸ்ட் 27) கொண்டாட்டம் தொடர்பாக தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, *பிளாஸ்டர் ஆப் பாரிஸில் செய்யப்பட்ட சிலைகளை பயன்படுத்த வேண்டும். *சிலைகளை அலங்கரிக்க பிளாஸ்டிக், தெர்மோகோல் உள்ளிட்ட பொருள்களை பயன்படுத்த தடை. *ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பூஜை பொருள்களை பயன்படுத்த அனுமதி இல்லை. *அனுமதியில்லாத இடங்களில் சிலைகளை கரைக்க கூடாது. SHARE IT.

News August 8, 2025

அரசியலமைப்பு புத்தகத்தை ராகுல் படிக்கணும்: அமித்ஷா

image

பிஹாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த அமித்ஷா, அரசியலமைப்பு புத்தகத்தை சுமந்து செல்லும் ராகுல் அதனை திறந்து படிக்க வேண்டுமெனவும், அதில் இந்தியாவில் பிறக்காதவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கவில்லை என்றும் கூறினார். பீகார் மக்களின் வேலைகளைப் பறிக்கும் வங்கதேசத்தினரைக் காப்பாற்ற ராகுல் விரும்புவதாகவும் விமர்சித்தார்.

News August 8, 2025

சிங்கத்தின் ஆட்டம் விரைவில்: சிம்பு படத்தின் புதிய அப்டேட்

image

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த படம், சிம்புவின் சம்பளப் பிரச்னை காரணமாக டிராப் ஆனதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் ‘தொடங்கியது.. மற்றவர்களின் அலறலை தாண்டி தொடரும்.. சிங்கத்தின் ஆட்டம் விரைவில்’ என குறிப்பிட்டு சிம்பு, வெற்றிமாறனை டேக் செய்துள்ளார். இப்படப் பணிகள் துவங்கி விட்டது என்பதை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!