News August 8, 2025
நாமக்கல்: பொது விநியோகத்திட்ட குறைதீா் முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், புதிய குடும்ப அட்டை கோருதல், பதிவு மற்றும் பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகாா்களை தெரிவிக்கும் வகையில், நாளை(ஆக.9) காலை 10 மணிமுதல் நண்பகல் 1 மணிவரை நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியா் அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் பிரிவில், குறைதீா் முகாம் நடைபெறுகிறது.
Similar News
News August 8, 2025
நாமக்கல்லில் 94.1°F வெப்பம் பதிவு!

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனாலும் இன்றைய தினம் அதிகபட்ச வெப்பநிலையாக 94.1° ஃபாரன்ஹீட் பதிவாகியுள்ளது. இதனால் சாலையோர வியாபாரிகளும், இருசக்கர வாகன ஓட்டிகளும், வேலைக்கு செல்வோரும் அவதியடைந்துள்ளனர்.
News August 8, 2025
நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு

நாமக்கலில் இருந்து இன்று நள்ளிரவு 1:05 மணிக்கு மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, நாகர்கோவில் போன்ற பகுதிகளுக்கு செல்ல 12689 சென்னை சென்ட்ரல் – நாகர்கோவில் வாரந்திர ரயிலில் டிக்கெட்டுகள் உள்ளன. ரயில் பயணிகள் விரைவாக முன்பதிவு செய்து பயணிக்கலாம். நாமக்கலில் இந்த ரயில்கள் புறப்படும் நேரம் திங்கள் அதிகாலை 5:05 மணிக்கு 12690 நாகர்கோவில் – சென்னை சென்ட்ரல் SF ரயில் உள்ளது.
News August 8, 2025
தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்ய அழைப்பு!

நாமக்கல், தொழிலாளர் உதவி ஆணையர் மூலம் தமிழ்நாடு உடலுழைப்பு வாழ்வாதாரத்தை காக்கும் வகையில், இணையம் சார்ந்த தொழில்களில் ஈடுபடும் அலுவலகத்தின் தொழிலாளர்களின் நல வாரியத்தில் அதிகளவில் பதிவு செய்வதற்கு ஏதுவாக நாமக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகங்களில் பதிவு செய்து பயன்பெற மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் துர்கா மூர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார்.