News August 8, 2025
துணை ஜனாதிபதி பதவிக்கு தேர்தல் மன்னன் வேட்புமனு

சேலம்: மேட்டூர் அருகே குஞ்சாண்டியூர் பனங்காடு பகுதியைச் சேர்ந்த பத்மராஜன்(65) துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக சுயேட்சையாக தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இது இவரது 250ஆவது வேட்பு மனுத்தாக்கல் ஆகும். இதற்கு முன்பு 249 தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 8, 2025
சேலம்: தங்கத்துடன் இலவச திருமணம்!

சேலம் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் பல்வேறு கோயில்கள் உள்ளது. இக்கோயில்களில் சட்டப்பேரவை அறிவிப்பு (2025-26) எண் 1-ன் படி, ஏழை எளிய இந்து மக்கள் பயன்பெறும் வகையில் திருக்கோயில் மூலம் ரூ.70,000 (4 கிராம் தங்கம்) திட்ட செலவில் திருமணம் நடத்தப்பட உள்ளது. இத்திட்டப்படி திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் உங்கள் அருகே உள்ள அரசு நிர்வாக கோயில் அலுவலகத்தை அணுகலாம். SHARE பண்ணனுங்க!
News August 8, 2025
சேலத்தில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம்

சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டு மையம் சார்பில், தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் மின்னாம்பள்ளியில் உள்ள மகேந்திரா பொறியியல் கல்லூரியில் நாளை(ஆக.9) நடக்கிறது. இதில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றனர்.
News August 8, 2025
சேலம்: நல்ல சம்பளத்தில் வங்கி அலுவலர் வேலை! CLICK

சேலம் மக்களே.., பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா வங்கியில், காலியாகவுள்ள 417 Manager – Sales, Officer Agriculture Sales, Manager Agriculture Sales பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. சம்பளம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <