News August 8, 2025
விழுப்புரத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அமைந்துள்ள ரங்கபூபதி கல்லூரியில் நாளை (ஆக.9) தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாமில் 18 – 40 வயதுடைய இருபாலரும் பங்கேற்கலாம். 8ம் வகுப்பு முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை அனைவருக்கும் வேலைவாய்ப்பு உள்ளது. தெரிந்தவர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க.
Similar News
News August 8, 2025
நெடுஞ்சாலைத் துறைபணிகள் குறித்த ஆய்வு

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான், தலைமையில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடைபெற்று வரும்
பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று (08.08.2025) நடைபெற்றது.
உடன் தனி மாவட்ட வருவாய் அலுவலர் (மாநில நெடுஞ்சாலைகள்) ராஜகுமார் உள்ளார்.
News August 8, 2025
விழுப்புரம் மாணவர்களே நாளை கடைசி நாள்

விழுப்புரம் மாவட்டத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் பெரும்பாலான மாணவர்கள் கணினி அறிவியல், ஈசீஇ, ஐடி போன்ற கணினி சார்ந்த பாடப்பிரிவுகளை அதிக அளவில் தேர்ந்தெடுத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து 3ஆம் கட்ட கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்த கலந்தாய்விற்கான சாய்ஸ் பில்லிங் செய்ய நாளை (ஆக.9) கடைசி நாள்.
News August 8, 2025
என்ன சான்றுகளை பெறலாம்?

வருமான சான்று, சாதி சான்று, இருப்பிடச் சான்று,கணவனால் கைவிடப்பட்டோர் சான்று, முதல் பட்டதாரி சான்று, விவசாய வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், குடிபெயர்வு சான்றிதழ், சிறு/குறு விவசாயி சான்றிதழ், ஆண் குழந்தை என்பதற்கான சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், சொத்து மதிப்பு சான்றிதழ், விதவை சான்றிதழ் & வேலையில்லாதோர் சான்றிதழை நீங்கள் இதன் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க