News August 8, 2025
வரலட்சுமி நோன்பு அன்று செய்ய வேண்டியவை

வரலட்சுமி நோன்பு அன்று வீட்டை சுத்தம் செய்து, மாவிலைத் தோரணம் கட்டி அலங்கரிக்க வேண்டும். கோலமிட்டு, கலசம் நிறுவி அதன் மேல் தேங்காயை வைக்க வேண்டும். இந்த கலசத்திற்கு அம்மன் முகம், ஆடை, அணிகலன்கள் அணிவித்து மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். பின் பஞ்சமுக நெய் விளக்கேற்றி நைவேத்தியங்களைப் படைக்க வேண்டும். அஷ்டலட்சுமி/ கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி அஷ்டோத்ர சதம் போன்ற மந்திரங்களைச் சொல்லி வழிபடலாம்.
Similar News
News December 7, 2025
தி.மலை:கரண்ட் கட்? Whatsapp மூலம் எளிய தீர்வு..!

தி.மலை மாவட்டத்தில் உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு -94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம்.இத்தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.
News December 7, 2025
தி.மலை: இது உங்க போன்- ல கண்டிப்பாக இருக்கனும்!

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் உங்கள் போனில் உள்ளதா? அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க.. இதை பதிவிறக்கம் செய்யுங்க.. 1.) UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF. 2.) AIS – வருமானவரித்துறை சேவை. 3.) DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள் 4.) POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை 5.) BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை. 6.) M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்..SHARE NOW
News December 7, 2025
தி.மலைக்கு மத்திய அரசு செய்த நலத்திட்டங்கள்- நயினார் பட்டியல்!

திருவண்ணாமலைக்கு செய்த நலத்திட்டங்களை பாஜக தலைவர் பட்டியலிட்டார். திண்டிவனம்-செஞ்சி ரயில் பாதை அமைக்க 50 கோடி, விழுப்புரம்-வேலூர்- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை அமைக்க 269 கோடி, கிருஷ்ணகிரி- திண்டிவனம் சாலை அமைக்க 562 கோடி, பி. எம்.கிசான் திட்டத்தில் 3.5 லட்சம் பேருக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டதென பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் நேற்று பொதுக்கூட்டத்தில் பேசினார்.


