News August 8, 2025

வரலட்சுமி நோன்பு அன்று செய்ய வேண்டியவை

image

வரலட்சுமி நோன்பு அன்று வீட்டை சுத்தம் செய்து, மாவிலைத் தோரணம் கட்டி அலங்கரிக்க வேண்டும். கோலமிட்டு, கலசம் நிறுவி அதன் மேல் தேங்காயை வைக்க வேண்டும். இந்த கலசத்திற்கு அம்மன் முகம், ஆடை, அணிகலன்கள் அணிவித்து மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். பின் பஞ்சமுக நெய் விளக்கேற்றி நைவேத்தியங்களைப் படைக்க வேண்டும். அஷ்டலட்சுமி/ கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி அஷ்டோத்ர சதம் போன்ற மந்திரங்களைச் சொல்லி வழிபடலாம்.

Similar News

News August 8, 2025

கள்ளக்குறிச்சி: SBI வங்கியில் வேலை வாய்ப்பு

image

SBI வங்கியில் Customer Support மற்றும் Sales பிரிவில் உள்ள ஜூனியர் அசோசியேட் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 5,180 பணியிடங்கள். தமிழ்நாட்டிற்கு 380 காலிப்பணியிடங்கள். 20 – 28 வயதுடைய டிகிரி படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும். ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை சம்பளம் வழங்கப்படும். இந்த <>லிங்கில் <<>>வரும் 26ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யுங்கள்

News August 8, 2025

கள்ளக்குறிச்சி: குடும்ப அட்டை குறை தீர்ப்பு சிறப்பு முகாம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்ட வழங்கல் பிரிவில் 09.08.2025 அன்று குடும்ப அட்டை குறை தீர்ப்பு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் குடும்ப அட்டையில் பெயர் நீக்கம் பெயர் சேர்த்தல் முகவரி மாற்றம் புதிய குடும்ப அட்டை விண்ணப்பித்தல் போன்ற அனைத்து விதமான சேவைகள் நடைபெறுகிறது. எனவே பொதுமக்கள் இந்த குடும்ப அட்டை சிறப்பு முகாமினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

News August 8, 2025

கள்ளக்குறிச்சி: சான்றிதழ் தொலைந்தால் இதை செய்யுங்க! 2/2

image

வருமான சான்று, சாதி சான்று, இருப்பிடச் சான்று,கணவனால் கைவிடப்பட்டோர் சான்று, முதல் பட்டதாரி சான்று, விவசாய வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், குடிபெயர்வு சான்றிதழ், சிறு/குறு விவசாயி சான்றிதழ், ஆண் குழந்தை என்பதற்கான சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், சொத்து மதிப்பு சான்றிதழ், விதவை சான்றிதழ் & வேலையில்லாதோர் சான்றிதழை நீங்கள் இதன் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

error: Content is protected !!