News April 6, 2024
புத்திசாலித்தனமாக தங்கையை பாதுகாத்த சிறுமி

உத்தரபிரதேசத்தை சேர்ந்த சிறுமிகள் அலெக்ஸா கருவியின் உதவியுடன் தப்பித்துள்ளனர். நிகிதா என்ற சிறுமியின் வீட்டிற்குள் புகுந்த குரங்குகள், சமயலறையில் இருந்த பொருட்களை அங்கும் இங்குமாக வீசத் தொடங்கியுள்ளன. இதனால் சிறுமியின் தங்கை பயந்துபோன நிலையில், புத்திசாலித்தனமாக யோசித்த நிகிதா, அலக்ஸாவை குரைக்கக் கூறியுள்ளார். அலக்ஸாவில் இருந்து வந்த நாயின் சத்தத்தை கேட்ட குரங்குகள் அங்கிருந்து பயந்து ஓடியுள்ளன.
Similar News
News March 21, 2026
₹21,000 சம்பளம்.. 827 பணியிடங்கள்

மத்திய காவல்படையில் காலியாக உள்ள 827 பணியிடங்களுக்கான அறிவிப்பை SSB வெளியிட்டுள்ளது. கான்ஸ்டபிள் நிலை பணிகளுக்கு (டிரைவர், வெயிட்டர் உள்பட 11 பிரிவுகளுக்கு) 10-ம் வகுப்பு தகுதியும், 1 ஆண்டு துறைசார்ந்த அனுபவமும் தேவை. சம்பளம் : ₹21,700-₹69,100. உடற்தகுதி, எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். இதற்கு இந்த <
News March 21, 2026
BREAKING: விலகுவதாக அறிவித்தார் டிடிவி தினகரன்

டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த பின் பேட்டியளித்த TTV தினகரன், வரும் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகுவதாக மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அமித்ஷாவை சந்தித்தது குறித்து விளக்கம் அளித்த அவர், பிஹாரில் NDA ஒற்றுமையாக செயல்பட்டு வென்றதை போல தமிழ்நாட்டிலும் வெற்றி பெறுவது பற்றி ஆலோசித்ததாக குறிப்பிட்டார். பேச்சுவார்த்தைக்காக டெல்லிக்கு செல்வது தவறில்லை எனவும் TTV தினகரன் தெரிவித்தார்.
News March 21, 2026
எல்லாவற்றிலும் முந்தும் சீமான்

மார்ச் 23 முதல் முதற்கட்ட பிரசார சுற்றுப்பயணத்தை சீமான் மேற்கொள்ளவுள்ளார். திருத்தணி முருகனை தரிசித்துவிட்டு பரப்புரையை தொடங்கும் அவர், மார்ச் 28-ல் ஆவடியில் முதற்கட்ட தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்கிறார். தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே 234 தொகுதிகளுக்கும் சீமான் வேட்பாளர்களை அறிவித்தார். சமீபத்தில் நாதக தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டு தேர்தல் களத்தில் பரபரப்பாக இயங்கி வருகிறார்.


