News August 8, 2025
இறங்குமுகத்தில் இந்தியப் பங்குச்சந்தைகள்!

USA வரி விதிப்பு சர்ச்சையால் இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் பாதிப்பை கண்டுள்ளன. இன்றும் சரிவுடன் சந்தை தொடங்கியுள்ளது. சென்செக்ஸ் 145 புள்ளிகள் சரிந்து 80,478 புள்ளிகளிலும், நிஃப்டி 51 புள்ளிகள் சரிந்து 24,544 புள்ளிகளிலும் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. HDFC Bank, Bharti Airtel, Cipla, Hindalco உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவைக் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News August 8, 2025
அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி.. அமைச்சர் தகவல்

‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ பரப்புரைக்கு இடையே <<17339627>>பிரேமலதா<<>>, LK சுதீஷ், விஜய பிரபாகரன் உள்ளிட்டோரை சந்தித்து அதிமுக Ex அமைச்சர் KC வீரமணி பேசினார். கூட்டணிக்கு அச்சாரமாக இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், கட்சியின் எதிர்கால நலனுக்காகவே பிரேமலதாவை சந்தித்ததாகவும், தங்களது கூட்டணியில் தேமுதிக தொடர்வதற்கு அதிமுக தயார் எனவும் வீரமணி தெரிவித்துள்ளார். சீக்கிரமே கூட்டணி முரசு கொட்டுமா?
News August 8, 2025
கோபி, சுதாகருக்கு ஆதரவு கரம் நீட்டிய சீமான்

சாதிய பிரச்னைகள் குறித்து கோபி – சுதாகர் சரியாகத்தானே சொல்லியுள்ளனர் என சீமான் தெரிவித்துள்ளார். அவர்களை ஏன் எச்சரிக்க வேண்டும் என கேள்வி எழுப்பிய அவர், எச்சரிப்பதே ஒரு சாதிய ஆணவம் தானே என கேட்டுள்ளார். ‘Society Paavangal’ என்று கோபி – சுதாகர் யூடியூப்பில் பதிவேற்றம் செய்த வீடியோவை நீக்குவதோடு, சேனலையும் தடை செய்யகோரி புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News August 8, 2025
காந்தாரா பட நடிகர் மரணம்!

பிரபல நடிகர் பிரபாகர் கல்யாணி, வீட்டில் மயங்கி விழுந்து காலமானார். இவர் 2 நாள்களுக்கு முன் தான் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘காந்தாரா’ படத்தின் மூலம் பெரும் பிரபலமடைந்த பிரபாகர், மேடை நாடகங்களிலும் மக்களை பெருமளவில் கவர்ந்தார். முன்னதாக, காந்தாரா 1’ படத்தில் நடித்து வந்த 3 நடிகர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி இருந்தது.