News August 8, 2025
BREAKING: நெல்லை வாலிபர் கொலை – 4 குற்றவாளிகள் கைது

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே சங்கநேரியை சேர்ந்த பிரபுதாஸ் (27) என்பவரை வேலைக்கு அழைத்து சென்ற கும்பல் கழுத்தை அறுத்து கொலை செய்தது. இச்சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரபுதாஸ் உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், போலீசார் கொலை செய்த 4 குற்றவாளிகளை கைது செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
Similar News
News August 8, 2025
நெல்லை: சுதந்திர தின சிறப்பு ரயில் – முன்பதிவு தொடக்கம்

நெல்லை ரயில் பயணிகளுக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் விடப்பட்டுள்ளது. இதில் வண்டி எண் 06089, 06090 ஆகிய ரயில்கள் நெல்லை வழியாக வந்து செல்கின்றது. இதற்கான முன்பதிவு இன்று (ஆகஸ்ட் 8) காலை 8 மணி முதல் தொடங்கியுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் விடப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News August 8, 2025
நெல்லை முதியவர் வீட்டில் பிள்ளையார் சிலை திருட்டு

நெல்லை, வண்ணார்பேட்டையை சேர்ந்த ஆறுமுகம் (65) தனது வீட்டு முன்பாக கடந்த 18 ஆண்டுகளாக 3/4 அடியில் பிள்ளையார் சிலை வைத்து பூஜை செய்து வந்தார். இன்று அதிகாலை 1 மணி அளவில் பார்த்தபோது பிள்ளையாரை காணவில்லை. மின்தடையை பயன்படுத்தி மர்ம நபர்கள் சிலையை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. புகாரின் பேரில் பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலையை திருடிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை.
News August 8, 2025
நெல்லை மக்களே இதை SAVE பண்ணிக்கோங்க!

நெல்லை மாவட்டத்தில் பணியாற்றும் முக்கிய அதிகாரிகள் யார் ? அவர்களை தொடர்பு கொள்ளும் எண்கள் . மாவட்ட ஆட்சியர் – சுகுமார் – 0462-2501035
காவல்துறை கண்காணிப்பாளர் – சிலம்பரசன் – 0462-2568020
மாநகராட்சி ஆணையர் – சுகபுத்ரா – 0462-2329329
மாவட்ட வருவாய் அலுவலர் – சுகன்யா – 0462-2500466
ஊரகவளர்ச்சிதுறை இணை இயக்குநர் – சரவணன் – 0462-2500611
SHARE பண்ணி மற்றவர்களுக்கு தெரியபடுத்துங்க!