News August 8, 2025
எந்த கட்சியையும் கூட்டணிக்கு அழைக்கவில்லை: EPS

திமுகவுக்கு எதிராக வலிமையான கூட்டணி அமைக்க பல கட்சிகள் தங்களுடன் பேசி வருவதாக EPS கூறியுள்ளார். தனியார் நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், இதுவரை எந்தக் கட்சியையும் குறிப்பிட்டு அதிமுக அழைப்பு விடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிமுக கூட்டணிக்கான அழைப்பை நிராகரித்ததாக கூறப்படும் நிலையில், EPS எந்த கட்சிகளையும் தாங்கள் அழைக்கவில்லை என கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.
Similar News
News August 8, 2025
15 மாவட்டங்களுக்கு இன்று கனமழை வார்னிங்!

கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தி.மலையில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. அதேபோல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், சென்னையில் இன்றும் நாளையும் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
News August 8, 2025
BREAKING: ஆக.13-ல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

ஆக.13-ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். காலை 10:30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
News August 8, 2025
சென்னை ஐகோர்ட் நீதிபதியின் விநோத அழைப்பு!

ராமதாஸ், அன்புமணி <<17340719>>இருவரிடம் தனியாக பேச வேண்டும்<<>> என ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அழைப்பு விடுத்துள்ளது விநோதமானது என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது குடும்பப் பிரச்னை அல்ல; கட்சியின் சட்ட விதிகளுக்கு உட்பட்டது எனக் கூறும் சட்ட வல்லுநர்கள், வழக்கை விசாரிப்பதற்கு முன்பு வேண்டுகோளாக விடுத்துள்ளதால் இதனை ஏற்பது ராமதாஸ் மற்றும் அன்புமணியின் தனிப்பட்ட விருப்பம் எனக் கூறியுள்ளனர்.