News August 8, 2025
மாவட்டம் முழுவதும் 516 மதுவிலக்கு வழக்குகள் பதிவு

மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் நடத்தப்பட்ட சிறப்பு மதுவேட்டையில் சட்டவிரோதமாக மதுபானம் கடத்தல், விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் மீது 516 வழக்குகள் பதியப்பட்டு அதில் தொடர்புடைய 524 எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மது கடத்தலுக்கு பயன்படுத்திய 8 இருசக்கர வாகனம் 5 நான்கு சக்கர வாகனங்கள் 4378 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன
Similar News
News August 8, 2025
மயிலாடுதுறை: ரூ.48,000 சம்பளத்தில் BANK வேலை!

மயிலாடுதுறை மக்களே, பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா வங்கியில், காலியாகவுள்ள 417 Manager – Sales, Officer Agriculture Sales, Manager Agriculture Sales பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் 26ம் தேதிக்குள் <
News August 8, 2025
சீர்காழியில் மாணவர்களுக்கான மேடைப் பேச்சு பயிற்சி முகாம்

மாணவ பேச்சாளர்களை உருவாக்கும் நோக்கத்துடன் ஜே.சி.ஐ சீர்காழி கிரீன் சிட்டி சார்பில் மேடைப்பேச்சு பயிற்சி முகாம் நாளை சனிக்கிழமை சீர்காழி தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. சிறந்த பேச்சுத் திறன் கொண்ட பள்ளி மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
News August 8, 2025
கடைமடை பகுதியில் சிறப்பு கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

கொள்ளிடம் பகுதியில் பிரதான புதுமண்ணியாறு தெற்கு ராஜன் வாய்க்கால் மற்றும் பொறை வாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால்களில் கடைமடை பகுதி வரை பாசனத்திற்கு தண்ணீர் சென்று சேர்ந்துள்ளதா என சிறப்பு கண்காணிப்பு பொறியாளர் திருமலை குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் மயிலாடுதுறை கீழ் காவிரி வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் மாரிமுத்து உள்ளிட்ட நீர்வளத்துறை அதிகாரிகள் உடன் பங்கேற்றனர்.