News April 6, 2024
பாகிஸ்தான் தேர்தலுக்கான வாக்குறுதிகள் போல தெரிகிறது

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து சமூகத்தை பிரிக்க நினைப்பதாக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸின் தேர்தல் அறிக்கை பாகிஸ்தான் தேர்தலுக்கான வாக்குறுதிகள் போல தெரிவதாக கூறிய அவர், மக்களை பிளவுப்படுத்த நினைக்கும் காங்கிரசின் மோசமான அரசியலை கண்டிப்பதாக தெரிவித்துள்ளார். தேசத்திற்காக பாஜக உழைப்பதாக கூறிய அவர், மக்கள் அனைவரும் பாஜகவில் இணைய விரும்புவதாக தெரிவித்தார்.
Similar News
News November 11, 2025
நவ.14 அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகள் தின விழா!

TN-ல் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நவ.14-ம் தேதி குழந்தைகள் தின விழா நிகழ்ச்சிகள் நடத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. Ex PM ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளையொட்டி ஆண்டுதோறும் நவ.14-ஐ மத்திய, மாநில அரசுகள் குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகின்றன. அந்த வகையில், மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கவும், சமூக முன்னேற்ற உறுதிமொழி எடுக்கவும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News November 11, 2025
ஷ்ரேயஸ் ஐயருக்கு பதில் யார்?

SA அணிக்கு இந்தியாவில் 5 T20, 3 ODI, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. ODI தொடர் வரும் நவ. 30-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இந்த தொடரில் ஷ்ரேயஸ் ஐயர் விளையாட மாட்டார் என கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. தற்போது அவருக்கு பதில், 4-வது விக்கெட்டாக யார் சரியான சாய்ஸாக இருப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. திலக் வர்மாவை Replacement-ஆக களமிறக்கலாம் என கருத்துக்கள் எழுந்துள்ளது. யாரு கரெக்ட் சாய்ஸ்?
News November 11, 2025
3 மாதங்களாக செல்போன் ரீசார்ஜ் பண்ணலயா.. உஷார்!

3 மாதங்கள் ரீசார்ஜ் செய்யாவிட்டால், அந்த நம்பரை Recycle என்ற முறையில், Airtel புதிதாக நம்பர் வாங்குபவர்களுக்கு கொடுத்துவிடும் வாய்ப்புகள் அதிகம். அப்படி வாங்கிய புதிய நம்பரில், முன்னர் அதை முன்னர் பயன்படுத்தியவரின் Facebook, Uber, Swiggy போன்ற அக்கவுண்டுகளில் தானாகவே Log-in செய்ய முடிவதாக ஒருவர் பதிவிட்டுள்ளார். இது மட்டுமின்றி ஆதார், UPI அக்கவுண்டுகளின் தகவல்களும் திருடு போகும் அபாயம் உள்ளது.


