News August 8, 2025

அதிமுக, பாஜகவுடன் கூட்டணி இல்லை: விஜய் திட்டவட்டம்

image

மாற்றத்தை நோக்கிய அரசியல் பயணத்தில் அதிமுக, பாஜக உடன் கூட்டணி வைக்க விஜய் விரும்பவில்லை என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. தனியார் TV பத்திரிகையாளரிடம் கலந்துரையாடிய விஜய், TVK தலைமையில் கூட்டணி, முதல்வர் வேட்பாளரில் ஒருபோதும் சமரசம் இல்லை என்பதில் உறுதியாக கூறியுள்ளாராம். அதிமுக – பாஜக உடன் கூட்டணி இல்லை என TVK தரப்பு திரும்பத் திரும்ப கூறி வருவது கவனிக்கத்தக்கது. இது பற்றி உங்கள் கருத்து என்ன?

Similar News

News December 7, 2025

மதியத்தில் விஜய் பொதுக்கூட்டம்

image

ஈரோட்டில் விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டம் டிச.16-ம் தேதி மதியம் 1 – மாலை 6 மணிக்குள் நடைபெறவிருப்பதாக கலெக்டரிடம் செங்கோட்டையன் அளித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஈரோடு, பவளத்தாம்பாளையத்தில் 75,000 பேர் வந்து, செல்லும் வகையில் 7 ஏக்கர் இடத்தில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளதாகவும், ரோடு ஷோ இல்லாமல் பரப்புரை வாகனத்தில் விஜய் உரையாற்ற உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

News December 7, 2025

தவெகவுக்கு செல்கிறாரா இந்த திமுக அமைச்சர்?

image

அடுத்த பிப்ரவரிக்குள் 2 சிட்டிங் மினிஸ்டர்கள் தவெகவுக்கு வருவார்கள் என ஆதவ் பேசியிருந்தார். இந்நிலையில் அதில் ஒருவர் KKSSR-ஆக இருக்கலாமோ என சந்தேகிக்கப்படுகிறது. ஏற்கெனவே தேர்தலில் KKSSR-க்கு சீட் கிடைப்பது டவுட் என பேசப்படுகிறது. இதனை ஸ்மெல் செய்தே, தவெக அவரை அணுகக்கூடும் என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஆனால், இதுதொடர்பான Official தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

News December 7, 2025

RRB-யில் 161 பணியிடங்கள்.. ₹35,400 சம்பளம்!

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள தலைமை வணிக மற்றும் டிக்கெட் மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ➤காலியிடங்கள் 161 ➤கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி ➤வயது: 18- 33 வரை ➤தேர்வு முறை: 2 நிலை கணினி தேர்வு ➤விண்ணப்பிக்க கடைசி தேதி: டிச.20 ➤முழு தகவலுக்கு இங்கே <>கிளிக்<<>> செய்யவும். வேலை தேடும் அனைத்து நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!