News August 8, 2025
சிவகங்கையில் 18 ஆயிரம் பேர் பாதிப்பு

சிவகங்கையில் நாய்கள் கடித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் 18,033 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்.இது மக்களிடையே பெறும் அச்சத்தை ஏற்படுத்தியள்ளது. முக்கியமாகக் குழந்தைகள் வைத்திருப்போருக்கு இந்த செய்தியை SHARE செய்து விழிப்புணர்வுடன் இருக்க சொல்லுங்கள்.
Similar News
News August 8, 2025
கீழடி அகழ்வாராய்ச்சிக்கு அங்கீகாரம் அளிக்க கோரிக்கை

சமீபத்தில் மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்ற நடிகர் கமலஹாசன் நேற்று மரியாதை நிமித்தமாக பிரதமர் மோடியை சந்தித்தார். அப்பொழுது கீழடி அகழ்வாராய்ச்சிக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டியும், தமிழின் தொன்மை, தமிழ் நாகரிகத்தின் பெருமையை இந்த உலகிற்கு உரக்க சொல்ல பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
News August 8, 2025
சிவகங்கையில் இலவச தையல் மிஷின் பெற விண்ணப்பிக்கலாம்

சிவகங்கையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது.ஆண்டுக்கு ரூ.72,000-க்கு கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு சிவகங்கைமாவட்ட சமூக நல அலுவலரை 04575-240426 அணுகவும். இத்தகவலை SHARE செய்யவும்.
News August 8, 2025
அஜித்கொலை – நண்பரே மிளகாய் பொடி வாங்கிக் கொடுத்த அவலம்

திருப்புவனம்: அஜித் குமார் கொலை வழக்கில் இன்று சிபிஐ அதிகாரிகள்
மடப்புரம் கோவில் பகுதியில் விசாரணை நடத்தினர். இதில் இங்குள்ள கார் பார்க்கிங் அருகே உள்ள ஒரு மளிகைக் கடையில், அஜித் குமாரின் நண்பர் பிரவீன் குமார், காவல்துறையினர் கூறியதற்கிணங்க, மிளகாய்ப்பொடியை வாங்கி வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது. இந்த தகவல் விசாரணையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.