News August 8, 2025
வேண்டிய வரங்களை தரும் வனதுர்க்கை கோயில்!

கும்பகோணம் கதிராமங்கலத்தில் கிழக்கு நோக்கி வலதுகையில் அபய ஹஸ்தம், வரதம் என 2 முத்திரைகளுடன் துர்கை அம்மன் காட்சி தருகிறார். சேதமடைந்த தனது வீட்டு கூரை அம்மன் அருளால், நெற்கதிர்களால் வேயப்பட்டதால், ‘கதிர்வேய்ந்த மங்கல நாயகி’ எனப்பாடி கவிஞர் கம்பர் மனமுருகி பாடினார். அதுவே ‘கதிராமங்கலம்’ ஆனது. அர்ச்சனை செய்யும்போது அம்பாளின் வலதுகரத்தில் வியர்வை முத்துக்கள் வெளிப்படுவதாக கூறப்படுகிறது.
Similar News
News August 8, 2025
Way2News வினாடி வினா கேள்வி பதில்கள்..

கேள்விகள்:
1. ஒரு மனித உடலில் எத்தனை எலும்புகள் உள்ளன?
2. தமிழ்த்தாய் கோயில் எங்கு உள்ளது?
3. இந்தியாவின் தேசிய மரம் எது?
4. சுயமரியாதை திருமணம் எந்த ஆண்டு தமிழ்நாடு அரசினால் சட்டப்படியாக அங்கீகாரம் அளிக்கப்பட்டது?
5. தாவர செல்களில் உணவைச் சேமிப்பது எது?
சரியான பதிலை கமெண்ட் பண்ணுங்க. பதில்கள் Way2News-ல் மதியம் 12:30 மணிக்கு வெளியாகும்.
News August 8, 2025
KC வீரமணி – பிரேமலதா திடீர் சந்திப்பு

அதிமுக Ex அமைச்சர் KC வீரமணியை, பிரேமலதா விஜயகாந்த், LK சுதீஷ், விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் சந்தித்து பேசியுள்ளனர். திருப்பத்தூரில் ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ பரப்புரைக்கு இடையே இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. அதிமுக கூட்டணியில் தேமுதிக இல்லை என பிரேமலதா கூறிய பிறகு, அதிமுக தரப்பினரின் சந்திப்பை வெளிப்படையாக தவிர்த்து வந்த நிலையில், KC வீரமணியுடனான சந்திப்பு புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
News August 8, 2025
Whatsapp-ல் ஈசியா திருப்பதி தரிசன டிக்கெட் வாங்கலாம்!

Whatsapp-ல் ஈசியாக திருப்பதி தரிசன டிக்கெட் பெற,
*ஆந்திர அரசின் ‘9552300009’ என்ற நம்பருக்கு ‘HI’ என மெசேஜ் பண்ணுங்க.
*பிறகு, EN என மெசெஜ் செய்து, Service பற்றிய தகவல் ஆங்கிலத்தில் வரும்.
*அதில், TTD temple services-ஐ தேர்வு செய்யவும்.
*டிக்கெட் இருப்பை சரிபார்த்து, தேவையான டிக்கெட், நேரம் ஆகியவற்றை உங்களின் அரசு ID-யுடன் உள்ளிட்டால், டிக்கெட் Whatsapp-லேயே கிடைத்து விடும்.