News August 8, 2025
மாநில கல்விக் கொள்கையை வெளியிடுகிறார் CM ஸ்டாலின்

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக, பள்ளிக்கல்வித் துறைக்கான <<17330291>>மாநில கல்விக் கொள்கையை<<>> CM ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார். மாநில கல்விக் கொள்கையானது பள்ளிக்கல்வி, உயர்கல்வி என தன தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக இன்று பள்ளிக்கல்விக்கான அறிக்கையை CM வெளியிடுகிறார். இதில் சாத்தியம் உள்ள திட்டங்கள் நடப்பு ஆண்டிலேயே அமல்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News August 8, 2025
பகல் 12 வரை இன்று.. முக்கிய செய்திகள்!

✪தமிழகத்தின் <<17339521>>மாநிலக் <<>>கல்விக் கொள்கையை CM ஸ்டாலின் வெளியிட்டார்.
✪எந்த <<17338572>>கட்சியையும் <<>>கூட்டணிக்கு அழைக்கவில்லை: EPS
✪ராகுலின் <<17338941>>புகாருக்கு <<>>EC விளக்கம் அளிக்க வேண்டும்: சசிதரூர்
✪உச்சம் தொடும் விலை.. தங்கம் சவரனுக்கு ₹75,760-க்கு விற்பனை
✪ரஜினி பட <<17338273>>நடிகையின் <<>>அண்ணன் அடித்துக் கொலை!
News August 8, 2025
6 நாள்களில் சவரனுக்கு ₹2,560 உயர்ந்த தங்கம்

ஆகஸ்ட் மாதம் பிறந்ததில் இருந்தே தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இந்தியப் பொருள்களுக்கு USA-வில் 50% இறக்குமதி வரி என டிரம்ப் அறிவித்த பிறகு பங்குச்சந்தைகள் கடுமையாக சரிந்து வருகின்றன. இதனால், கடந்த 1-ம் தேதி ₹73,200-க்கு விற்பனையான 22 கேரட் தங்கம், <<17338724>>இன்று ₹75,760<<>>-க்கு விற்பனையாகிறது. இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிந்து வந்தால் வரும் நாள்களில் தங்கம் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.
News August 8, 2025
தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைதான்: CM உறுதி

பள்ளிக்கல்வி வரலாற்றிலேயே <<17339521>>மாநில கல்விக்கொள்கை வெளியீட்டு<<>> விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் குழந்தைகளின் கல்வி பாதிக்காமல் இருக்க இல்லம் தேடி கல்வி வழங்கியதாகவும் அவர் கூறியுள்ளார். 100% மாணவர்கள் உயர்கல்வி சேர்வதுதான் தமிழக அரசின் இலக்கு என கூறிய அவர் இரு மொழி கொள்கையே தமிழக அரசின் உறுதியான கொள்கை எனவும் தெரிவித்துள்ளார்.