News August 8, 2025
ரோந்து போலீசார் 2 பேருடன் செல்க: அண்ணாமலை

உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்ற அளவில் போலீசார் ரோந்து செல்வதாக SI சண்முகவேல் கொலையை சுட்டிக்காட்டி அண்ணாமலை விமர்சித்துள்ளார். இரவு ரோந்து போலீசார் தனியாக செல்லாமல் 2 பேருடன் செல்ல வேண்டும் எனவும், உடையில் கேமரா உள்ளிட்ட நவீன உபகரணங்கள் போலீசாருக்கு வழங்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், குற்றங்களுக்கு காரணமான மது, போதை பழக்கங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News August 8, 2025
சுதந்திர தின விடுமுறை: ரயில் முன்பதிவு தொடங்கியது

சுதந்திர தின விடுமுறையையொட்டி அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. ஆக.14 சென்னை – போத்தனூர்(06027), ஆக.17 நாகர்கோவில் – தாம்பரம்(06012), ஆக.14 சென்னை எழும்பூர் – செங்கோட்டை(06089) ஆகிய சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் புக்கிங் தொடங்கி <
News August 8, 2025
தீவிரவாதி குடும்பத்துடன் பேச அனுமதி

2008 மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதி தஹாவூர் ராணா, அவனுடைய குடும்பத்துடன் ஒருமுறை போனில் பேச டெல்லி கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. தற்போதைய வழக்கறிஞரை மாற்றிவிட்டு, புதிய வழக்கறிஞர் நியமிப்பது தொடர்பாக குடும்பத்தினருடன் பேச வேண்டும் என அவன் அனுமதி கோரி இருந்தான். தற்போது டெல்லி சட்ட சேவைகள் ஆணையத்தின் வழக்கறிஞர் பியூஷ் சச்தேவா, ராணாவிற்கு சேவை வழங்கி வருகிறார்.
News August 8, 2025
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹560 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹560 அதிகரித்துள்ளது. இதனால், வரலாறு காணாத புதிய உச்சமாக 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹9,470-க்கும், சவரன் ₹75,760-க்கும் விற்பனையாகிறது. இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிந்து வருவதால் முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் பக்கம் திரும்பியதே கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதாக பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.