News August 8, 2025
கார்ல் மார்க்ஸ் பொன்மொழிகள்

*ஒரு சமூகத்தின் பெண்களின் நிலை கொண்டே அந்த சமூகத்தின் தரம் மதிப்பிடப்படும். *என்றும் நினைவில் கொள்! மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக்கூடாது. *மக்கள் என்ன சொன்னாலும் பரவாயில்லை, உங்கள் சொந்தப் பாதையை பின்தொடருங்கள். *உழைப்பு தான் எல்லா செல்வங்களுக்கும் மதிப்புகளுக்கும் மூலதனம். *நம் வாழ்வில் கிடைக்காத பெரும் செல்வம், நாம் வீணாக கழிக்கும் ஒவ்வொரு வினாடியும்தான்.
Similar News
News August 8, 2025
வெறும் 45 பைசாவில் ₹10 லட்சம் வரை காப்பீடு!

ரயில்வேயில் ஆன்லைன் டிக்கெட் புக் செய்யும் போது ‘Optional Travel Insurance’-ஐ கிளிக் செய்ய வேண்டும். உங்கள் மொபைல், இ-மெயிலுக்கு காப்பீடு நிறுவனம் தொடர்பு கொள்ளும். அதில் நாமினி விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். Confirmed / RAC டிக்கெட் வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த ₹10 லட்சம் காப்பீட்டை பெற முடியும். ரயில் விபத்து, தீவிரவாத தாக்குதல், வன்முறை / திருட்டு சம்பவங்களின் போது க்ளைம் செய்யலாம்.
News August 8, 2025
திமுகவுக்கு ஊழலுக்கான விருது: EPS காட்டம்

திமுகவின் 50 மாத ஆட்சியில் லஞ்சம் தலைவிரித்தாடுவதாகவும் அனைத்து துறைகளிலும் ஊழல் நடப்பதாகவும் EPS குற்றம்சாட்டியுள்ளார். சிவகாசியில் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய அவர், 4 ஆண்டுகளில் சுமார் 22,000 கோடி கொள்ளை அடித்துள்ளதாகவும், ஊழலுக்காக அவர்களுக்கு விருது கொடுக்க வேண்டும் என்றும் காட்டமாக விமர்சித்தார். மேலும், VCK, CPM, CPI, காங்கிரஸ் என கூட்டணி கட்சிகளை நம்பியே திமுக இருக்கிறது என்றார்.
News August 8, 2025
உடல் எடையை குறைக்க உதவும் புரதம் நிறைந்த லஞ்ச்

எடையை குறைக்க உதவும் புரதம் நிறைந்த உணவுகளில் ஒன்று பனீர் புர்ஜி. செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி அடுத்து சீரகம் சேர்த்து, பிறகு வெங்காயம் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கி, இஞ்சி-பூண்டு விழுது சேர்க்கவும். தொடர்ந்து தக்காளி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, கரம் மசாலா, மிளகாய் தூளையும் கலக்கவும். பின் அரைத்த பனீர் சேர்த்து கலக்கி இறுதியில் கொத்தமல்லி சேர்க்கவும். சத்தான மதிய உணவு தயார்.