News August 8, 2025

நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் கலெக்டர் தகவல்

image

“நலம் காக்கும் ஸ்டாலின்” உயர் சிறப்பு மருத்துவ முகாம் வருகிற ஆகஸ்ட் 9-ம் தேதி வேலூர் மாவட்டம், ஊசூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் “நலம் காக்கும் ஸ்டாலின்” உயர் சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

Similar News

News March 6, 2026

வேலூர் ஆட்சியர் அதிரடி உத்தரவு!

image

வேலூரில் கோடை வெயிலின் தாக்கம் சதம் அடித்துள்ள நிலையில், வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது சுகாதாரத்துறை சார்பில் முக்கிய சிக்னல் பகுதிகளில் ‘பசுமை பந்தல்’ அமைக்கவும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ.ஆர்.எஸ். பாக்கெட்டுகள் இருப்பு வைக்கவும் உத்தரவிட்டுள்ளார். மேலும் பொது இடங்களில் குடிநீர் வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்வும் கூறியுள்ளார்.

News March 6, 2026

வேலூர்: காதல் வலையில் சிக்கிய மாணவி; 7 மாதம் கர்ப்பம்!

image

அணைக்கட்டு பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவருக்கு திருமணமாகி குழந்தை உள்ளது. இவர் 18 வயது கல்லூரி மாணவி ஒருவரிடம் திருமணம் செய்வதாக கூறி தனிமையில் இருந்துள்ளார். இதன் காரணமாக மாணவி கர்ப்பம் ஆகினார். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து சந்தோஷை தேடி வருகின்றனர்.

News March 6, 2026

வேலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

வேலூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.05) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!