News August 7, 2025
தூத்துக்குடி இன்று இரவு ரோந்து போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று (ஆக. 7) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News March 11, 2026
தூத்துக்குடி: மழையால் மின்தடையா.? whatsapp-ல் உதவி!

தூத்துக்குடி மாவட்ட மக்களே.. உங்க பகுதியில் மின்தடை உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு 94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இந்த தகவலை எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க.
News March 11, 2026
தூத்துக்குடி: அமெரிக்காவிற்கு அரசு ஊழியர்கள் கண்டனம்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள அரசு அலுவலகங்களில் அரசு ஊழியர்கள் அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது தாக்குதல் நடத்துவதை கண்டித்து நேற்று (மார்ச்.10) கருப்பு பேட்ஜ் அணிந்து அமெரிக்கா இஸ்ரேல் கொலை வெறி தாக்குதலை நிறுத்திடுக என்ற வசனத்துடன் கண்டனத்தை தெரிவித்தனர். இதில் கோவில்பட்டியில் உள்ள அனைத்து அரசு அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
News March 11, 2026
தூத்துக்குடி: போட்டோ கிராபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த முகேஷ் கண்ணன் (28) என்பவர் கழுகுமலையில் ஸ்டுடியோ நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவரது ஸ்டூடியோவில் புகுந்த 2 மர்ம நபர்கள் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி, கம்பால் தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் போலீசார் இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த குமார் (23) மற்றும் முத்து (20) ஆகிய இருவரை கைது செய்துள்ளனர்.


