News August 7, 2025
ஆசிய கோப்பை அணியில் கில் நீக்கம்? கிரிக்கெட் ரவுண்ட் அப்

*ஆண்டர்சன் – டெண்டுல்கர் தொடரில் சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால், கில், ராகுல், பும்ரா, பண்ட்டுக்கு ஆசிய கோப்பையில் வாய்ப்பளிக்கப்பட மாட்டாது என தகவல். * ஹண்ட்ரட் தொடரில் மான்செஸ்டர் அணியை சதர்ன் ப்ரேவ் அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. *மகளிர் ஹண்ட்ரட் தொடரில் பெண்கள் அணியில் மான்செஸ்டர் அணியை சதர்ன் ப்ரேவ் அணி வென்றது. *துலிப் டிராபி தொடரில் North Zone அணிக்கு கில் கேப்டனாக நியமனம்.
Similar News
News August 8, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: அறிவுடைமை ▶குறள் எண்: 421 ▶குறள்: அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண். ▶பொருள்: அறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம், பகைவராலும் அழிக்க முடியாத உட்கோட்டை.
News August 8, 2025
2025 Ballon d’Or: மெஸ்ஸி, ரொனால்டோ மிஸ்ஸிங்!

2025 Ballon d’Or விருதுக்கான பரிந்துரை பட்டியலில், ஃபுட்பால் உலகின் நட்சத்திர வீரர்களான மெஸ்ஸி, ரொனால்டோவின் பெயர்கள் இடம்பெறாதது அவர்களது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நடப்பாண்டுக்கான பரிந்துரை பட்டியலில் பிஎஸ்ஜி கிளப் அணியைச் சேர்ந்த 9 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். சிறந்த ஃபுட்பால் வீரருக்கான இந்த உயரிய விருதை மெஸ்ஸி 8 முறையும், ரொனால்டோ 5 முறையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
News August 8, 2025
கர்ப்பிணி என்று தெரிந்தும் இறக்கம் இல்லை: ராதிகா

கர்ப்பமாக இருந்த போது ஷூட்டிங்கில் எதிர்கொண்ட வலிகளை நடிகை ராதிகா ஆப்தே பகிர்ந்துள்ளார். ஒரு பாலிவுட் படத்தில் நடித்த போது தான் கர்ப்பமாக இருப்பதை தெரிந்து கொண்ட அப்படத்தின் தயாரிப்பாளர், மிகவும் இறுக்கமான ஆடைகளை அணிய சொல்லி கட்டாயப்படுத்தியதாகவும், டாக்டர்களை பார்க்கக்கூட அனுமதிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளாா். மேலும், அந்த வலியிலும் தன்னை படப்பிடிப்பில் ஈடுபடுத்தியதாகவும் கூறியுள்ளார்.