News August 7, 2025

நாடு முழுவதும் UPI சேவை பாதிப்பு

image

இரவு 7.45 மணிக்கு மேல் Gpay, Phonepe, Paytm செயல்பாடு பாதிக்கப்பட்டுள்ளது. HDFC, SBI, BANK OF BARODA, KOTAK MAHINDRA உள்ளிட்ட முக்கியமான வங்கிகளின் UPI சேவை முடங்கியுள்ளது. இரவு 8.30 மணியளவில் புகார் தெரிவிக்கும் வலைதளத்தில் 2,000-க்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்துள்ளன. அவற்றில் பெரும்பாலும் பணம் செலுத்தும்போது சிக்கல் எழுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்களுக்கும் UPI பிரச்னை உள்ளதா?

Similar News

News August 8, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: அறிவுடைமை ▶குறள் எண்: 421 ▶குறள்: அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண். ▶பொருள்: அறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம், பகைவராலும் அழிக்க முடியாத உட்கோட்டை.

News August 8, 2025

2025 Ballon d’Or: மெஸ்ஸி, ரொனால்டோ மிஸ்ஸிங்!

image

2025 Ballon d’Or விருதுக்கான பரிந்துரை பட்டியலில், ஃபுட்பால் உலகின் நட்சத்திர வீரர்களான மெஸ்ஸி, ரொனால்டோவின் பெயர்கள் இடம்பெறாதது அவர்களது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நடப்பாண்டுக்கான பரிந்துரை பட்டியலில் பிஎஸ்ஜி கிளப் அணியைச் சேர்ந்த 9 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். சிறந்த ஃபுட்பால் வீரருக்கான இந்த உயரிய விருதை மெஸ்ஸி 8 முறையும், ரொனால்டோ 5 முறையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

News August 8, 2025

கர்ப்பிணி என்று தெரிந்தும் இறக்கம் இல்லை: ராதிகா

image

கர்ப்பமாக இருந்த போது ஷூட்டிங்கில் எதிர்கொண்ட வலிகளை நடிகை ராதிகா ஆப்தே பகிர்ந்துள்ளார். ஒரு பாலிவுட் படத்தில் நடித்த போது தான் கர்ப்பமாக இருப்பதை தெரிந்து கொண்ட அப்படத்தின் தயாரிப்பாளர், மிகவும் இறுக்கமான ஆடைகளை அணிய சொல்லி கட்டாயப்படுத்தியதாகவும், டாக்டர்களை பார்க்கக்கூட அனுமதிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளாா். மேலும், அந்த வலியிலும் தன்னை படப்பிடிப்பில் ஈடுபடுத்தியதாகவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!