News August 7, 2025

WOW! ஈஃபில் டவர் வளர்கிறதா?

image

பாரீஸின் புகழ்பெற்ற ஈஃபிள் கோபுரம் வளர்கிறது என்றால் ஆச்சரியமாக உள்ளதா? ஆம்! கோடைக் காலத்தில் அதன் உயரம் 15 செ.மீ., வரை அதிகரிக்கிறது. வெப்பநிலை உயரும்போது பொருள்கள் விரிவடையும் என்ற இயற்பியல் விதியின் அடிப்படையிலேயே கோடையில் அதன் இரும்பு கட்டுமானம் லேசாக விரிவடைகிறது. இவ்வாறு விரிந்து சுருங்குவதற்கு ஏற்ப, தண்டவாளத்தில் உள்ளதுபோல், அவற்றின் இணைப்புகள் போதிய இடைவெளி விட்டு அமைக்கப்பட்டுள்ளன.

Similar News

News March 8, 2026

உலகப்போரையே நிறுத்திய பெண்கள்.. வரலாறு தெரியுமா?

image

புராணக் கதைகளால் போர் வெடிப்பதே பெண்களால்தான் என்ற தவறான புரிதல் சமூகத்தில் இருக்கிறது. ஆனால் உலகப்போரையே நிறுத்த பெண்கள் முக்கியப் பங்கு வகித்த வரலாற்றை பற்றி தெரியுமா? 8 மார்ச், 1917-ல் World War 1 போது பசி, பட்டினி, வறுமை இருந்தது. இதனை எதிர்த்து ஒன்று கூடிய பெண்கள் ‘Bread & Peace’ போராட்டத்தை ரஷ்யாவில் நடத்தினார்கள். 1918-ல் போர் நின்றதோடு, ரஷ்ய பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது.

News March 8, 2026

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

image

புதுக்கோட்டை, திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நாளை(9.3.2026) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்கள் நாளை இயங்காது. அதேநேரம், அரசு பொதுத்தேர்வுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதியின்படி மாற்றமின்றி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 8, 2026

திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் MLA

image

அதிமுக முன்னாள் MLA இளையக்கண்ணு திமுகவில் இணைந்துள்ளார். 2001 முதல் 2006 வரை ஏற்காடு சட்டமன்ற தொகுதி MLA-வாக பதவி வகித்த இளையக்கண்ணு, அதிமுகவிலும் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்தவர். EPS மீது ஏற்பட்ட அதிருப்தியால் கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த அவர், சேலத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.

error: Content is protected !!