News August 7, 2025
₹3,500 கோடி ஊழல் வழக்கில் சிக்கிய நடிகை தமன்னா?

ஆந்திராவில் ₹3,500 கோடி மதுபான ஊழல் வழக்கின் விசாரணை வளையத்திற்குள் நடிகை தமன்னா சிக்கியுள்ளார். ஜெகன்மோகன் ஆட்சியில் நடந்த இந்த மோசடியில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், தமன்னாவுக்கு தொடர்பு இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. மோசடி பணத்தில் அவரது ‛ஒயிட் அண்ட் கோல்டு’ கம்பெனி 300 கிலோ தங்கம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News December 7, 2025
லோகியின் அடுத்த குக்கிங்.. ஆமிர் கான் அப்டேட்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஆமிர் கான் நடிக்கவுள்ளதாக ஏற்கெனவே கூறப்பட்டது. இந்நிலையில், தான் லோகேஷுடன் பேசி வருவதை ஆமிர் உறுதி செய்துள்ளார். ஒரு மாதத்திற்கு முன்பு லோகியுடன் பேசியதாகவும், விரைவில் மும்பையில் சந்தித்து பேசவுள்ளதாகவும் கூறியுள்ளார். தற்போது வரை தற்காலிகமாக லோகியின் டைரக்ஷனில் கமிட்டாகியுள்ளதாக ஆமிர் ஹிண்ட் கொடுத்துள்ளார். லோகேஷ் – ஆமிர் காம்போ எப்படி இருக்கும்?
News December 7, 2025
அமித்ஷா திராவிட முன்னேற்ற கழகமாக மாறிவிட்டது: DCM

அமித்ஷாவுக்கு எதிராக எந்த கருத்தும் கூறமுடியாத நிலைக்கு EPS தள்ளப்பட்டுள்ளதாக உதயநிதி கூறியுள்ளார். அதிமுக இனி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அல்ல என்ற அவர், அது அமித்ஷா திராவிட முன்னேற்ற கழகமாக மாறிவிட்டதாக விமர்சித்துள்ளார். மேலும் அதிமுகவில் அண்ணாவும் இல்லை, திராவிடமும் இல்லை, முன்னேற்றமும் இல்லை; சொல்லப்போனால் அதிமுகவே இல்லை எனவும் சாடியுள்ளார்.
News December 7, 2025
உக்ரைன் மீது தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா!

USA குழுவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்பட்டதாக ஜெலென்ஸ்கி கூறிய சில மணிநேரங்களில், உக்ரைன் மீது ரஷ்யா தீவிர தாக்குதலை நடத்தியுள்ளது. 653 ஆளில்லா விமானங்கள், 51 ஏவுகணைகள் மூலம் 700-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதனால் மின்நிலையங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. அணுமின் நிலையத்தின் மின்சாரம் துண்டிப்பு, உலை பாதுகாப்பிற்கான கவலையை எழுப்பியுள்ளது.


