News August 7, 2025

அரியலூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

image

சத்யவாணி முத்து அம்மையார் இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவைச் சேர்ந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள் (ஆண், பெண்) ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகிலுள்ள இ-சேவை மையம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு அரியலூர் சமூக நல அலுவலரை அணுகவும். SHARE பண்ணுங்க!

Similar News

News December 7, 2025

அரியலூர்: ATM பயன்படுத்துவோர் கவனத்திற்கு

image

அரியலூர் மக்களே, நீங்கள் ATM-இல் இருந்து பணம் எடுக்கும் போது, சில சமயம் வங்கி கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டும், மெஷினில் இருந்து பணம் வெளியே வராது. இத்தகைய சூழலை நீங்கள் எதிர்கொண்டால் உடனே உங்களது வங்கியில் சென்று புகார் அளிக்கலாம். அதன் பின் 5 நாட்களுக்குள் பணம் கிடைக்கவில்லை என்றால் <>இங்கே <<>>க்ளிக் செய்து, RBI-இல் புகார் அளித்தால் போதும் தாமதமான ஒவ்வொரு நாளுக்கும் ரூ.100 இழப்பீடாக வழங்கப்படும்.

News December 7, 2025

அரியலூர்: சொந்த வீடு கட்ட அரசின் சூப்பர் ஆஃபர்

image

சொந்த வீட்டின் கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் உள்ள சொந்த வீடு இல்லாதவர்கள்,<> pmay-urban.gov.in <<>>என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News December 7, 2025

அரியலூர்: காவல்துறை மூலம் வாகனங்கள் பொது ஏலம்

image

அரியலூர் மாவட்ட காவல்துறையால் கஞ்சா குற்றவழக்குகளில் கைப்பற்றப்பட்டு, அரசுடைமையாக்கப்பட்ட 11 இருசக்கர வாகனங்கள் மற்றும் 01 நான்கு சக்கர வாகனம் பொது ஏலம் வரும் டிச.11ஆம் தேதி, அரியலூர் ஆயுதப்படை மைதானத்தில், ஏலம் விடப்பட உள்ளதாகவும், இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு 9786881576 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட எஸ்பி அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!