News August 7, 2025
80 வயது நபர் முதல் முறை வாக்காளராம்: ராகுல் காந்தி

80 வயதாகும் நபர் முதல்முறை வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். EC மீது வரலாறு காணாத குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தி சுமத்தியுள்ளார். அதில், ஒருவருக்கு ஒரு வாக்கு என்ற அடிப்படையை கொண்டதே இந்திய அரசமைப்பு என்றும், ஆனால் ஒரு வாக்காளர் பெயர் 4 பூத்களிலும், சில வாக்காளர்கள் பெயர்கள் பல மாநிலங்களில் உள்ள பூத்களில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
Similar News
News March 12, 2026
மோடி ஆட்சியில் 1.50 லட்சம் விவசாயிகள் தற்கொலை:ரகுபதி

விவசாயிகளுக்கு எதிராக திமுக செயல்படுவதாக PM மோடி வைத்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார். 3 வேளாண் சட்டங்கள் உள்பட விவசாயிகளுக்கு எதிராக அனைத்தையும் செய்துவிட்டு அவர்களை பற்றி பேச மோடிக்கு எந்த உரிமையும் இல்லை என அவர் சாடியுள்ளார். மோடி ஆட்சியில் 1.5 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், தேர்தல் வந்தாலே TN மீது PM-க்கு பாசம் வந்துவிடும் எனவும் விமர்சித்துள்ளார்.
News March 12, 2026
3 சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. அதிரடி தீர்ப்பு

நெல்லை, மேலப்பாளையத்தில் 2023-ம் ஆண்டில் 3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இந்நிலையில் அந்த வழக்கை விசாரித்த நெல்லை போக்சோ கோர்ட், 40 வயதான குற்றவாளி ஆனந்த சேகருக்கு தூக்கு தண்டனை விதித்து இன்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. அத்துடன் 3 சிறுமிகளுக்கும் தலா ₹7 லட்சத்தை இழப்பீடாக வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளது.
News March 12, 2026
ரஜினியை மிரட்டியது திமுக: ஆதவ் அர்ஜுனா

ரஜினி அரசியல் கட்சி தொடங்காததற்கு திமுகவே காரணம் என ஆதவ் அர்ஜுனா பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார். திமுக விடுத்த மிரட்டலால் தான் ரஜினி மனவலிமை இழந்து பின்வாங்கியதாக குறிப்பிட்ட அவர், விஜய் திமுகவை எதிர்த்து நிற்கிறார் என்றால் அவருக்கு மன வலிமை அதிகம் எனவும் பேசியுள்ளார். முன்னதாக, உடல்நிலை காரணமாக அரசியலுக்கு வரவில்லை என ரஜினி கூறியது குறிப்பிடத்தக்கது.


