News August 7, 2025
தி.மலை: மனைவிக்கு கொலை மிரட்டல்

திருவண்ணாமலையை சேர்ந்த மோனிஷா (26), மோகன்ராஜ் (27) ஆகியோர் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து 2023ல் கடலூரில் பதிவு திருமணம் செய்துகொண்டனர். சமீபமாக மோகன்ராஜ் சரியாக பேசவில்லை எனக்கூறி, ஜூலை 27ல் அவர் வீட்டில் கேட்டபோது மோனிஷாவை திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. புகாரின்பேரில் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து (ஆகஸ்ட்-07) விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 27, 2025
JUST IN: தி.மலை விவசாயிகளுக்கு முதல்வர் புதிய அறிவிப்பு

தி.மலையில் இன்று வேளாண் கண்காட்சியைத் திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், வேளாண் துறைக்கு இதுவரை ரூ.1.94 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அவர், பெரணமல்லூரில் 500 மெட்ரிக் டன் சேமிப்புக் கிடங்கு மற்றும் விவசாயிகளுக்கான ஓய்வறை அமைக்கப்படும் என அறிவித்தார். மேலும், சேத்துப்பட்டு, போளூர் மற்றும் வந்தவாசி பகுதிகளில் புதிய உலர்கூடங்கள் அமைக்கப்படும் என்றும் கூறினார்.
News December 27, 2025
தி.மலை: மின்தடையா? உடனே CALL

தி.மலை மக்களே.. உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, மின் இணைப்பு எண் (Service Number), இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும். அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். உடனே ஷேர் பண்ணுங்க!
News December 27, 2025
தி.மலை: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <


