News August 7, 2025

நாளை உழவர் நலத்துறை திட்ட முகாம்

image

காஞ்சிபுரம் வட்டாரத்தில் கோளிவாக்கம், புஞ்சையரசந்தாங்கல், சித்தேரிமேடு, திருப்பருத்திகுன்றம். வாலாஜாபாத் வட்டாரத்தில் தண்டலம், நெல்வாய், களியனுார் உள்ளிட்ட இடங்களில் நாளை(ஆகஸ்ட். 8) காலை 10:00 மணிக்கு, ‘உழவரை தேடி வேளாண்’ உழவர் நலத்துறை திட்ட முகாம்கள் நடைபெற உள்ளன. இம்முகாம்களில் அனைத்து விவசாயிகளும் பங்கேற்று பயன் பெறலாம் என காஞ்சிபுரம் வேளாண் இணை இயக்குநர் கிருஷ்ணவேணி தெரிவித்தார்.

Similar News

News August 8, 2025

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்

image

காஞ்சிபுரத்தில் இன்று (அக.8) காஞ்சிபுரம், குன்றத்தூர், வாலாஜாபாத் ஆகிய பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. முகாம் நடைபெறும் இடங்களின் முழுமையான விபரங்களை <>இந்த லிங்கை கிளிக் செய்து<<>> தெரிந்து கொள்ளலாம். இந்த முகாமில் மகளிர் உரிமை தொகை, ஓய்வூதியம் போன்ற அரசு சேவைகளில் குறை இருந்தால் மனுவாக அளித்து உடனடியாக பயன்பெறலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News August 8, 2025

காஞ்சி மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (05.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News August 7, 2025

பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ள அழைப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4,09,883 குடும்ப அட்டைதாரர்கள் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் பெறாத குடும்ப அட்டைதாரர்கள், அத்தியாவசியப் பொருட்கள் பெற விருப்பமில்லை எனில் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் www.tnpds.gov.in என்ற வலைதளத்தின் மூலமாக தங்களது குடும்ப அட்டையினை பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!