News August 7, 2025
திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின்” என்ற திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் வரும் 9-ம் தேதி, பாப்பாக்குறிச்சி அருகில் உள்ள உருமு தனலட்சுமி கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகள் தங்களது பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் -2, ஆதார் நகல் மற்றும் தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டையுடன் கலந்து கொண்டு பயனடையலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 8, 2025
திருச்சி: தமிழ் செம்மல் விருது பெற அழைப்பு

திருச்சி மாவட்டத்தில் உள்ள தமிழ் ஆர்வலர்களுக்கு 2025ஆம் ஆண்டிற்கான தமிழ் செம்மல் விருது வழங்கப்பட உள்ளது. தமிழ் ஆர்வலர்கள் என்ற www.tamilvalarchithurai.com என்ற தளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, திருச்சி மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் அலுவலகத்திற்கு வரும் 26 ஆம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News August 7, 2025
திருச்சி – ராமேஸ்வரம் ரயில் 4 நாட்கள் ரத்து

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து காலை 7:05 மணிக்கு புறப்படும் திருச்சி – ராமேஸ்வரம் விரைவு ரயிலானது வரும் 11, 12, 13, 14 ஆகிய 4 நாட்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து மானாமதுரை வரை மட்டுமே இயக்கப்படும் என திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 7, 2025
திருச்சி: வாழை விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் நிறுவன தின விழா மற்றும் உழவர் தின விழா வரும் ஆக.,21ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் சிறந்த வாழை விவசாயி விருது, சிறந்த வேளாண் அறிவியல் நிலைய விருது உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆக.,14-ம் தேதிக்குள் தாயனூர் தேசிய வாழை ஆராய்ச்சி மைய முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என மைய இயக்குனர் செல்வராஜன் தெரிவித்துள்ளார்.