News August 7, 2025

நவீன தமிழகத்தின் சிற்பி கருணாநிதி: MP கமல்

image

சமூகநீதியின் அடையாளமாகவும், அரசியல் மாண்பிற்கு ஆகச்சிறந்த முன்னுதாரணமாகவும் திகழ்ந்த ஆசான் என கருணாநிதியின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி MP கமல்ஹாசன் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், தன் வாழ்நாள் முழுக்க தமிழையும், தமிழர் நலனையும் மூச்சாக கொண்டு வாழ்ந்த முத்தமிழறிஞர், நவீன தமிழகத்தின் சிற்பி எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.

Similar News

News August 10, 2025

அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை

image

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 16 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. அதன்படி, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, நெல்லை, குமரி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, கோவை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது.

News August 10, 2025

அமைச்சரின் பேச்சால் தூய்மை பணியாளர்கள் அதிருப்தி

image

‘பணி நிரந்தரம்’ செய்யக்கோரி, தூய்மைப்பணியாளர்கள் தலைநகரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் அமைச்சர் சேகர்பாபு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை. இதன்பின் அவர், ‘பணி நிரந்தரம் தரோம்னு நாங்க எதுவும் வாக்குறுதி கொடுக்கவில்லையே என பேசியிருந்தார். அதேபோல், பேச்சுவார்த்தையின்போது அவர் பேசிய சில விஷயங்களும் போராட்டக்குழுவை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

News August 10, 2025

வசூலை அள்ளும் ‘மகாவதார் நரசிம்மா’!

image

சாமி படத்தை அனிமேஷனில் யார் பார்க்க போகிறார்கள் என்று நினைத்தவர்களின் கணிப்பை ‘மகாவதார் நரசிம்மா’ மாற்றிவிட்டது. படம் ரசிகர்களை பெரிதாக கவர்ந்து தற்போது வரை ₹150 கோடி வசூலை குவித்துள்ளது. யுனிவர்ஸ் கான்செப்ட்டில் உருவான இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த 6 படங்கள் வெளியாகவுள்ளன. அவற்றை பிரமாண்டமாக தயாரிக்கும் வேலைகளில் இறங்கியுள்ளது ஹொம்பாலே பிலிம்ஸ். நீங்க படம் பாத்துட்டீங்களா?

error: Content is protected !!