News August 7, 2025
தமிழ் சினிமாவின் சில முதல் முயற்சி படங்களின் தொகுப்பு!

கலைநயத்துடன் கதை சொல்வதில் தொடங்கி, கமர்சியல் சினிமாவின் உச்சத்தையும் கோலிவுட் பார்த்துள்ளது. இன்று ₹1,000 கோடி வசூல் இல்லை என விமர்சிக்கப்பட்டாலும், பலவற்றிலும் இந்திய சினிமாவுக்கு முன்னோடியாக திகழ்ந்துள்ளது தமிழ் சினிமா. அப்படி தமிழ் சினிமாவில் முதல் முறையாக செய்யப்பட்ட சில முயற்சிகளை அடுத்தடுத்த போட்டோக்களில் வரிசைப்படுத்தியுள்ளோம். உங்களுக்கு தெரிந்த சிலவற்றையும் கமெண்ட் பண்ணுங்க?
Similar News
News December 8, 2025
FLASH: தங்கம் விலையில் மாற்றமில்லை

தங்கம் விலையில் இன்று(டிச.8) மாற்றிமின்றி 22 கேரட் 1 கிராம் ₹12,040-க்கும், சவரன் ₹96,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வார இறுதியில் கிடுகிடுவென உயர்ந்து வந்த தங்கத்தின் விலையானது, சர்வதேச சந்தையில் நிலவும் மந்தநிலை(1 அவுன்ஸ் $4,210) காரணமாக இன்று விலையில் எவ்வித மாற்றமுமின்றி விற்பனையாகிறது. சுபமுகூர்த்த மாதம் என்பதால் இது நடுத்தர மக்களை சற்று நிம்மதியில் ஆழ்த்தியுள்ளது.
News December 8, 2025
NDA கூட்டணியில் சேர பாஜக மிரட்டலா? டிடிவி விளக்கம்

பாஜக அதிகாரத்தை பயன்படுத்தி மற்ற கட்சிகளை அழுத்துகிறது என்ற குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ளவில்லை என டிடிவி தினகரன் கூறியுள்ளார். கூட்டணிக்காக அதிகாரத்தை வைத்து பாஜக மிரட்டுகிறது என்று நினைக்கவில்லை என கூறிய அவர், நட்பு ரீதியாகவே பேசுவதாகவும் விளக்கமளித்துள்ளார். மேலும், அதிமுகவை ஒருங்கிணைக்க நினைக்கும் பாஜகவின் எண்ணத்தையும் குறை சொல்ல முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
News December 8, 2025
BREAKING: கே.என்.நேரு மீது FIR பதிவு செய்ய பரிந்துரை

திமுக முக்கிய அமைச்சர்களில் ஒருவரான கே.என்.நேரு மீது FIR பதிவு செய்ய ED பரிந்துரை செய்துள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடந்த பணி நியமனங்களில் லஞ்சமாகவும், கட்சி நிதியாகவும் ₹1,020 கோடி பெறப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக நேரு மீது FIR பதிவு செய்து, விசாரனை நடத்த தமிழக உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபிக்கு 252 பக்க ஆவணங்களை ED அனுப்பியுள்ளது.


