News August 7, 2025
தூத்துக்குடி: பெண்களே இந்த நம்பரை உடனே SAVE பண்ணுங்க..

தூத்துக்குடி மக்களே, வரதட்சணை தடைச் சட்டம், 1961ன்படி, மாவட்ட சமூக நல அலுவலர்கள் வரதட்சணை தடுப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். காவல் துறையின் பரிந்துரையின் பேரில், வரதட்சணை கொடுமை தொடர்பான புகார்களை இவர்கள் விசாரிக்கின்றனர். நீங்கள் வரதட்சணையால் பாதிக்கப்பட்டிருந்தால் இலவச செல்போன் எண்ணான 181 அல்லது 0461-2325606 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். *தெரிந்தவர்களுக்கு இதை ஷேர் செய்து உதவுங்கள்*
Similar News
News August 11, 2025
திருச்செந்தூர் பகுதிகளில் மின்தடை

திருச்செந்தூர் மின் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 11) வெயிலுகந்த அம்மன் கோவில் ஆவணி திருவிழா தேரோட்டம் நடைபெற உள்ளது. இதனால் வடக்கு ரத வீதி, மேல ரத வீதி, கீழ ரத வீதி, தெற்கு ரத வீதி மற்றும் உள் மாட வீதிகளிலும் காலை 6 மணி முதல் 8 மணி வரை மின்தடை ஏற்படும் என்று திருச்செந்தூர் உதவி பொறியாளர் அறிவித்துள்ளார்.
News August 11, 2025
தூத்துக்குடி இன்று இரவு ரோந்து போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
News August 10, 2025
திருச்செந்தூர் அருகே அருமையான சுற்றுலா தலம் – அய்யனார் சுணை

திருச்செந்தூரிலிருந்து 4 கி.மீ.தொலைவில் அய்யனர் சுணை அமைந்துள்ளது. ஆண்டு முழுவதும் ஊற்றி பெருகும் இயற்கையான நீருற்று அருகில் அய்யனார் கோவில் உள்ளது. காடுகள் சூழ்ந்த இந்த இடம் சிறந்த சுற்றுலாத்தலமாகவும் விளங்குகிறது. விடுமுறை நாட்களில் இந்த பகுதிக்கு சென்றுவரலாம். உங்க நண்பர்களுக்கு இதை *SHARE* பண்ணுங்க.