News August 7, 2025
தென்காசி: கேஸ் DELIVERY அப்போ இதை பண்ணுங்க!

தென்காசி மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த சந்தோஷமான தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.
Similar News
News December 26, 2025
தென்காசி: கழிவு நீரோடையில் சடலம் மீட்பு!

சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த அமர்நாத் பிரபாகரன் (27), சென்னையில் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். 2 நாட்களுக்கு முன்பு புளியங்குடிக்கு வந்தார். சிந்தாமணி பகுதியில் உள்ள கழிவுநீரோடையில் உடலில் காயங்களுடன் நேற்று முன் தினம் இரவு இறந்த நிலையில் கிடந்தார். தகவலறிந்து வந்த புளியங்குடி போலீஸார் அவரது உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசாதனைக்கு அனுப்பி வைத்தனர்.
News December 26, 2025
தென்காசி: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

தென்காசி மக்களே நீங்க வேலை பார்க்கும் இடத்தில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 0452‑2604368, தொழிலாளர் இணை ஆணையர் – 0462-2573017 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள் உதவி கிடைக்கும். உழைத்து வாழும் அனைவருக்கும் SHARE செய்யுங்க
News December 26, 2025
தென்காசி: அரசு பேருந்தில் பிரேக் கோளாறால் விபத்து…

அம்பையில் இருந்து கடையம் அருகே உள்ள பெத்தாபிள்ளை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. கடனாநதி அருகே சென்ற போது திடீரென பிரேக் பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. பேருந்து ஓட்டுநர் அன்பரசனின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் பார்வதி (67), சூரியகவி (65), அமராவதி (67), ஜானகி (37) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீஸார் விசாரிக்கின்றனர்.


