News August 7, 2025
கூட்டணி மாறும் மதிமுக: மல்லை சத்யா

துரை வைகோ மத்திய அமைச்சராக ஆசைப்படுவதால் பாஜகவுடன் நெருக்கம் காட்டுவதாக மல்லை சத்யா கூறியுள்ளார். மேலும், திமுக கூட்டணியில் இருக்கும் மதிமுக, விரைவில் கூட்டணி மாறும்; அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் துரை எடுத்து வருவதாகவும் உறுதிப்பட தெரிவித்தார். மதிமுக கூட்டணி மாறப்போவதாக வெளியான செய்தியை வைகோ மறுத்த நிலையில், கடந்த 2 வாரங்களில் மோடியை துரை வைகோ 2 முறை (திருச்சி, டெல்லி) சந்தித்துள்ளார்.
Similar News
News January 14, 2026
புதுவையில் புதிய கூட்டணி.. விஜய்க்கு அதிர்ச்சி

புதுச்சேரியில் சமீபத்தில் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தொடங்கிய லட்சிய ஜனநாயக கட்சி (LJK), என்.ஆர்.காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், LJK-வுக்கு 2 இடங்கள் ஒதுக்க NR காங்., ஒப்புதல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. புதுவையில் தவெக உடன் NR காங்., கூட்டணி அமைக்கும் என்ற பேச்சு எழுந்த நிலையில், அரசியல் களத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
News January 14, 2026
ஹார்ட் அட்டாக்கை தடுக்க செலவில்லாத ஈஸி வழி

மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் வராமல் தடுக்க சிறந்த வழி, சரியான தூங்கும் பழக்கத்தை கடைப்பிடிப்பது தான் என்கின்றனர் அமெரிக்க ஆய்வாளர்கள். *காலையில் ஒழுங்காக எழுந்திருப்பது *தினசரி இரவில் 7-8 மணிநேரம் தூக்கம் *பகல் தூக்கத்தை குறைப்பது (அ) தவிர்ப்பது *தூக்கமின்மை பிரச்னைகளை சரிசெய்வது… இவற்றை ஒழுங்காக கடைப்பிடித்தாலே, இதய நோய்கள் வரும் வாய்ப்பை 42% குறைக்கலாம் என ஆய்வாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.
News January 14, 2026
கவனம்.. இருமல் மருந்துக்கு தடை

ம.பி.,யில் Coldrif இருமல் மருந்தை குடித்த 22 குழந்தைகள் உயிரிழந்தது தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், ‘அல்மாண்ட் கிட் சிரப்’ மருந்துக்கு புதுச்சேரி அரசு தடை விதித்துள்ளது. இதில் சிறுநீரகத்தை பாதிக்கும் ‘எத்திலீன் கிளைகோல்’ அதிகமாக இருப்பது தெரிய வந்ததால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை பிஹாரில் உள்ள ட்ரிடஸ் ரெமிடீஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. BE ALERT.


