News August 7, 2025
திருமணமாகாதவர்களுக்கு ₹1.5 லட்சம் சம்பளத்தில் வேலை!

இந்திய ராணுவத்தில் 350 Technical காலியிடங்களை(Short Service) நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 21-27 வயதுக்குட்பட்ட என்ஜினியரிங் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். முக்கிய கண்டிஷன் திருமணமாகாதவராக இருக்க வேண்டும். பதவிக்கேற்ப மாதம் ₹56,000- ₹1.5 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு வரும் ஆகஸ்ட் 22-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு <
Similar News
News August 10, 2025
இடுப்பு நரம்புகளை வலுவாக்கும் ‘சலபாசனம்’

✦இடுப்பு தசைகள் வலுப்பெறும்.
✦தரையில் குப்புறப் படுத்துக் கொள்ளவும். உள்ளங்கைகள் தரையில் பட, கைகளை உடலுக்குப் பக்கவாட்டில் நீட்டவும்.
➥கழுத்து, கால் & தொடைகளை மெதுவாக மேலே தூக்கவும். இந்த நிலையில் 15-30 விநாடிகள் இருந்து, பின் பழைய நிலைக்குத் திரும்பவும்.
✦செரிமான மண்டலம் மேம்படுகிறது.
✦ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
News August 10, 2025
பாமகவால் திமுகவை வீழ்த்த முடியாது: மனோ தங்கராஜ்

2026 தேர்தலில் திமுக ஆட்சியை அகற்றுவோம் என்று பாமக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ், ‘அன்புமணியின் ஆணி வேரே உடைந்து இருக்கிறது; அடுத்த தேர்தலுக்கு பிறகு பாமக என்ற கட்சி இருக்காது’ என்று பதிலடி கொடுத்துள்ளார். மேலும், அன்புமணி நினைத்தால் எல்லாம் திமுகவை வீழ்த்த முடியாது; 2026-ல் திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தெரிவித்தார்.
News August 10, 2025
நிலத்தை விட்டுக் கொடுக்க முடியாது: ஜெலன்ஸ்கி

போர் நிறுத்தத்திற்காக தங்கள் நாட்டு நிலப்பகுதிகளை விட்டுத்தர முடியாது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். தங்கள் மக்களுக்கு கவுரவமான சமாதானம் வேண்டும், உக்ரைன் இல்லாமல் நடைபெறும் சமாதான பேச்சுவார்த்தை தோல்வியில் தான் முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். போர் நிறுத்தம் தொடர்பாக அடுத்த வாரம் புடினை சந்தித்து பேச உள்ள நிலையில், நிலப்பகுதி பரிமாற்றங்கள் இருக்கும் என டிரம்ப் கூறியிருந்தார்.