News August 7, 2025
ஆசிய கோப்பை: பும்ரா அவுட்.. ரிஷப் பண்ட் டவுட்!

Asia Cup-க்கான அணி தேர்வு சூடுபிடித்துள்ளது. ENG தொடரில் காயமடைந்த பண்ட் & Work Load காரணமாக பும்ராவும் விளையாட மாட்டார்கள் என கூறப்படுகிறது. கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்படுவார் என்றும், சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் கண்டிப்பாக இடம் பிடிப்பார்கள் என தகவல் வெளிவந்துள்ளது. நீங்க பெஸ்ட் பிளேயிங் XI சொல்லுங்க?
Similar News
News December 9, 2025
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பிரிவைச் சார்ந்த மாணவர்கள், பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி தெரிவித்துள்ளார். வருகிற டிச.31ம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04328-296565 என்ற எண்ணை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 9, 2025
நீதிபதிகளை திமுக பயமுறுத்த நினைக்கிறது: அண்ணாமலை

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி G.R.சுவாமிநாதன், இந்திய இறையாண்மைக்கு எதிராக தீர்ப்பு வழங்கவில்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார். நீதிபதியை பதவிநீக்கம் செய்ய திமுக கூட்டணி MP-க்கள் நாடாளுமன்றத்தில் கையெழுத்து வாங்கி வருகின்றனர். அரசுக்கு ஒரு தீர்ப்பு பிடிக்கவில்லை என்பதற்காக நீதிபதியை பதவிநீக்கம் செய்வோம் என்றால், அது மற்ற நீதிபதிகளை பயமுறுத்துவதாகத்தான் அர்த்தம் என்றும் அவர் கூறியுள்ளார்.
News December 9, 2025
நடிகை வன்கொடுமை வழக்கு: பார்வதி அதிருப்தி

<<18502482>>நடிகை பாலியல் வன்கொடுமை<<>> வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் தனக்கு உடன்பாடு இல்லை என்பதை, நடிகை பார்வதி காட்டமாக வெளிப்படுத்தியுள்ளார். எது நீதி? கவனமாக உருவாக்கப்பட்ட திரைக்கதை தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது; இதை நாம் கவனித்து கொண்டிருக்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாக குரல் கொடுத்ததில் பார்வதியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.


