News August 7, 2025

தென்காசி கரடி தாக்கியதில் 3 பெண்கள் படுகாயம்

image

தென்காசி, புளியங்குடி அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள விவசாய நிலத்தில் இன்று காலை விவசாய பணிக்காக சென்ற ஷேகம்மாள்(52) அம்பிகா(40) ராமலட்சுமி(46) என்ற 3 பெண்களை அங்கிருந்த கரடி தாக்கியதில் படுகாயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த புளியங்குடி காவல் துறையினர் அங்கு சென்று காயமடைந்த பெண்களை மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

Similar News

News August 7, 2025

அஞ்சல்துறையை கண்டித்து பட்டினி போராட்டம்

image

சாம்பவர்வடகரையை சேர்ந்த ஒற்றைப்போராளி வைத்திலிங்கம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: பன்னெடுங்காலமாய் பயன்பாட்டில் இருந்துவரும் பதிவுத்தபால் முறையை வரும் 1ம் தேதி முதல் ரத்து செய்வதாக அஞ்சல் துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை வாபஸ் பெறக்கோரி தென்காசி அஞ்சல் அலுவலகம் முன்பு 01.09.2025 அன்று 8 மணி முதல் 10 மணி நேரம் பட்டினிப் போராட்டத்தை நான் மேற்கொள்ள இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

News August 7, 2025

தென்காசி: கேஸ் DELIVERY அப்போ இதை பண்ணுங்க!

image

தென்காசி மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த சந்தோஷமான தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

News August 7, 2025

தென்காசி : 10th PASSக்கு.. ரயில்வே வேலை! Apply…

image

தென்காசி மக்களே, இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 6,238 டெக்னீசியன் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஆகஸ்ட்.07) கடைசி நாளாகும். 10, 12ம் வகுப்பு மற்றும் ஐடிஐ படித்தவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சம்பளம் – ரூ.19,900 – ரூ.29,200 வரை வழங்கப்படும். கடைசி வாய்ப்பை தவற விடாதீர்கள். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!