News April 6, 2024

தெலங்கானா எல்லையில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

image

தெலங்கானா-சத்தீஸ்கர் எல்லையையொட்டிய புஜாரி கங்கர் வனப்பகுதியில், பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், அந்தப் பகுதியில் ஆயுதங்களை மீட்டுள்ளதாகவும், தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருவதாகவும் மத்திய ரிசர்வ் போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த ஒருவாரத்தில் 6க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் போலீஸ் என்கவுண்ட்டரில் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 19, 2026

அன்பிலை எதிர்க்கும் நவல்பட்டு விஜி.. அன்று நட்பு, இன்று பகை!

image

ஒரு காலத்தில் நட்புடன் இருந்த அன்பில் மகேஷுக்கும், <<19423109>>நவல்பட்டு விஜிக்கும்<<>> இடையே கடந்த சில மாதங்களாகவே மோதல் இருந்துள்ளது. இதனால், அவர் திமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தார். இந்நிலையில், சமூக வாக்கு, மக்களுக்கு தெரிந்த முகம் உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில், அன்பில் மகேஷுக்கு எதிராக திருவெறும்பூர் தொகுதியில் தவெக வேட்பாளராக நவல்பட்டு விஜியை களமிறக்க விஜய் திட்டமிட்டுள்ளாராம்.

News March 19, 2026

தமிழ்நாட்டில் 5 தலைநகரங்கள்.. நாதக தேர்தல் வாக்குறுதி!

image

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை சீமான் சற்றுமுன் வெளியிட்டுள்ளார். அதில், *சென்னை, திருச்சி, கோவை, மதுரை, குமரி என 5 தலைநகரங்கள். *வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு வாக்குரிமை. *ஜனாதிபதியை மக்களே தேர்ந்தெடுக்க வலியுறுத்துவோம். *3 சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு லோக்சபா தொகுதி. *சென்னையில் சுப்ரீம் கோர்ட் கிளை அமைப்பு உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.

News March 19, 2026

தவெகவுக்கு எவ்வளவு வாக்கு உள்ளது? கேட்டார் ஸ்டாலின்

image

விருப்பமனு அளித்தவர்களிடம் மாவட்ட வாரியாக ஸ்டாலின் நேர்காணல் நடத்தி வருகிறார். அப்போது, பெரும்பாலானோரிடம் உங்கள் தொகுதியில் தவெகவுக்கு எவ்வளவு வாக்கு வங்கி உள்ளது என்று ஸ்டாலின் கேட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனைப் பொறுத்து இளைஞர்கள், பெண்கள் வாக்குகளை கவரும் வகையில் திமுகவினர் தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும் என அவர் அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

error: Content is protected !!