News August 7, 2025
மாற்றம் இல்லாததால் ஏமாற்றம்.. சந்தைகள் சரிவு!

ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி தொடரும் என RBI அறிவித்தது, ஐடி, மருந்து துறை பங்குகளை முதலீட்டாளர்கள் அதிக அளவில் விற்றது உள்ளிட்ட காரணங்களால் பங்குச்சந்தைகள் கடும் சரிவைக் கண்டுள்ளன. இன்று(ஆக.7) சென்செக்ஸ் 213 புள்ளிகள் சரிந்து 80,330 புள்ளிகளிலும், நிஃப்டி 64 புள்ளிகள் சரிந்து 24,509 புள்ளிகளிலும் வர்த்தகமாகின்றன. Tata Motors, HCL Tech, Jio Financial நிறுவனங்களின் பங்குகள் அதிகம் சரிந்துள்ளன.
Similar News
News August 11, 2025
ராசி பலன்கள் (11.08.2025)

➤ மேஷம் – உயர்வு ➤ ரிஷபம் – நட்பு ➤ மிதுனம் – வெற்றி ➤ கடகம் – பயம் ➤ சிம்மம் – பகை ➤ கன்னி – அமைதி ➤ துலாம் – தெளிவு ➤ விருச்சிகம் – ஆதரவு ➤ தனுசு – உறுதி ➤ மகரம் – பெருமை ➤ கும்பம் – பொறுமை ➤ மீனம் – ஓய்வு.
News August 11, 2025
கோவையில் முதல்வருக்கு பிரம்மாண்ட வரவேற்பு

கள ஆய்வு செய்வதற்காக கோவை சென்ற CM ஸ்டாலினுக்கு, திமுகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். நாளை காலை கோவை, திருப்பூர், உடுமலைப்பேட்டையில் அரசின் நலத்திட்ட உதவிகளை ஸ்டாலின் வழங்க உள்ளார். தொடர்ந்து, பொள்ளாச்சியில் Ex CM காமராஜர், வி.கே.பழனிசாமி, சி.சுப்பிரமணியம், பொள்ளாச்சி மகாலிங்கம் ஆகியோரது உருவச்சிலைகளை திறந்து வைக்கவுள்ளார். CM வருகையையொட்டி 1,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
News August 10, 2025
சங்கை அறுப்போம்… கமலுக்கு துணை நடிகர் கொலை மிரட்டல்

சனாதனத்துக்கு எதிராக பேசிய கமல்ஹாசனின் சங்கை அறுப்போம் என துணை நடிகர் ரவிச்சந்திரன் மிரட்டல் விடுத்துள்ளார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து மக்கள் நீதி மய்யத்தின் துணைத்தலைவரும் ஓய்வு பெற்ற ஐஜி-யுமான மவுரியா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அகரம் நிகழ்ச்சியில் பேசிய கமல் சனாதன சங்கிலிகளை உடைக்கும் ஒரே ஆயுதம் கல்வி என கமல் கூறியிருந்தார்.