News August 7, 2025
பனாரஸ் ரயில் இனி புதுக்கோட்டையில் நின்று செல்லும்

ராமேஸ்வரம் – பனாரஸ் வாராந்திர அதிவேக விரைவு ரயில் இனி செவ்வாய்க்கிழமை தோறும் புதுகை ரயில் நிலையத்தில் இரண்டு நிமிடம் (அதிகாலை 3:33 மணிக்கு வந்து 3:35 மணிக்கு புறப்படும்) நின்று செல்லும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும், காரைக்குடிக்கு 2:58க்கு வந்து 3 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News August 18, 2025
புதுக்கோட்டை: மின்தடை அறிவிப்பு!

புதுக்கோட்டை, ஆதனக்கோட்டை, புதுப்பட்டி, பழைய கந்தர்வகோட்டை, மங்களா கோவில், குளத்தூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக இந்த துணைமின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெரும் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News August 18, 2025
இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (ஆக 18) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாநகராட்சி 18ம் வார்டு பகுதி பொதுமக்களுக்கு தொண்டைமான் நகர் சமுதாயக் கூடத்திலும், அரிமளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு பிலியவயல் ஊராட்சி வம்பரம்பட்டி சமுதாயக் கூடத்திலும், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்திற்கு அரசர்குளம் கீழ்பாதி ஊராட்சியில் உள்ள வசந்தம் திருமண மகாலில் நடைபெற உள்ளது.
News August 17, 2025
புதுக்கோட்டை இரவு நேர ரோந்து பணி போலீசார் விபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 17) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. தேவையுள்ளவர்கள் புதுக்கோட்டை மாவட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம். அல்லது 100ஐ அழைக்கலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!