News August 7, 2025
பெரியாரும், பேரறிஞரும் தமிழகத்திற்கு தந்த நெருப்பு: CM

மறைந்த Ex CM கருணாநிதியின் 7-ம் ஆண்டு நினைவு தினம் இன்று. இந்நிலையில், தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் தமிழினத்திற்கு தந்த நெருப்பு என CM ஸ்டாலின் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், கலைஞரின் ஒளியில், எல்லோர்க்கும் எல்லாம், எதிலும் தமிழ்நாடு முதலிடம் எனும் இலக்கை நோக்கி வெற்றிப் பாதையில் நடைபோடுவோம் எனவும் உணர்ச்சி பொங்க பதிவிட்டுள்ளார்.
Similar News
News August 10, 2025
ஒரே நேரத்தில் கடலில் இறங்கும் இந்தியா, பாக் படைகள்

இந்தியா, பாகிஸ்தான் நாடுகளின் கடற்படைகள், ஒரே நேரத்தில் அரபிக்கடலில் போர்ப் பயிற்சியில் ஈடுபடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 11, 12 தேதிகளில் இருநாட்டு கடற்படைகளும், 60 கடல்மைல் தொலைவில் இப்பயிற்சிகளை மேற்கொள்ளும். ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு பாக்., எல்லையருகே இந்திய கடற்படை நடத்தும் முதல் பயிற்சி இதுவாகும். எனினும், இது வழக்கமானது தான் எனக் கூறப்படுகிறது.
News August 10, 2025
மாலைநேர உடற்பயிற்சி சிறந்தது: ஏன் தெரியுமா?

*காலையில் உடற்பயிற்சி செய்வதைவிட மாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வது உடலுக்கு மிகவும் நல்லது. *காலை நேர உடற்பயிற்சி, தசை செல்களை தூண்டி உடலை மிகவும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. *மாலை நேரத்தில் செய்யப்படும் உடற்பயிற்சியால், உடலின் முழு ஆற்றலும் அதிகரிக்கிறது. *இதனால் நீண்டநேரம் சோர்வடையாமல் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். மன அழுத்தத்தையும் குறைக்கும்.
News August 10, 2025
மீண்டும் மிரட்டுமா லோகேஷ், அனிருத் கூட்டணி?

மாஸ்டரில் தொடங்கிய லோகேஷ் அனிருத் கூட்டணி வெற்றிகரமாக ‘கூலி’ வரை தொடந்து வருகிறது. இதனிடையே அனிருத்துடன் இருக்கும் போட்டோக்களை லோகேஷ் X-ல் பகிர்ந்துள்ளார். அதில் ஒவ்வொரு முறை நாம் இணையும் போதும் சரவெடியாகதான் இருக்கும் என பதிவிட்டுள்ளார். மேலும், இன்னொரு தாயின் வயிற்றில் பிறந்த எனது தம்பி அனிருத் என்றும் தொடர்ந்து கலக்குவோம் Rockstar எனவும் குறிப்பிட்டுள்ளார். கூலியிலும் இந்த கூட்டணி ஜெயிக்குமா?