News August 7, 2025
ஆம்பூரில் வரும் 10ம் தேதி உணவு திருவிழா

ஆம்பூரில் உணவுத் திருவிழா, மரபு விளையாட்டு திருவிழா, மரபு விதைத் திருவிழா வரும் 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 – இரவு 8 வரை ஆம்பூர் இந்து மேல்நிலைப்பள்ளியில் நடைபெறயுள்ளது. இதில் திருப்பத்தூர் மாவட்ட பொது மக்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி இலவசம். மேலும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. இந்த week end-க்கு பிளான் ரெடி.
Similar News
News April 1, 2026
கரும்பூரில் பைக்கில் கொண்டு வந்த ரூ.66,400 பறிமுதல்

சட்டமன்ற பொதுத்தேர்தலையொட்டி, திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர், தீவிர வாகன சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், இன்று (ஏப்.01) ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரும்பூர் பகுதியில், தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அப்போது, குப்புசாமி என்பவர், தனது பைக்கில், உரிய ஆவணமின்றி ரூ.66,400 தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
News April 1, 2026
திருப்பத்தூர்: அனைத்து CERTIFICATES-ம் இனி Whatsapp-ல்!

திருப்பத்தூர் மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News April 1, 2026
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று மார்ச் 31, வெளியிட்டுள்ள விழிப்புணர்வு அறிக்கையில், எந்த ஒரு APK File களையும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம். அப்படி பதிவிறக்கம் செய்தால் தங்களுடைய மொபைல் ஹேக் செய்யப்படும் அல்லது தங்களுடைய வங்கி கணக்கில் உள்ள பணமோ பறிபோக நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


