News August 7, 2025
பள்ளி மாணவர்களுக்கு பறந்த உத்தரவு

நாடு முழுவதும் CBSE பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 75% வருகைப்பதிவு இருந்தால் மட்டுமே பொதுத்தேர்வு எழுத அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது. வருகைப் பதிவு விதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், விளையாட்டு வீரர்கள், மருத்துவ சிகிச்சை உள்ளிட்டவற்றுக்கு, உரிய ஆவணங்கள் அடிப்படையில், எழுத்துப்பூர்வ விண்ணப்பங்கள் பெற்று, சிறப்பு அனுமதியுடன் தேர்வு எழுதலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
Similar News
News March 18, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹640 குறைந்தது

தங்கம் விலை தொடர்ந்து 7-வது நாளாக சரிவைக் கண்டுள்ளது. சென்னையில், இன்று(18.03.2026) 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹80 குறைந்து ₹14,570-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ₹640 குறைந்து ₹1,16,560-க்கு விற்பனையாகிறது. ஈரான் – இஸ்ரேல் இடையான போர் பதற்றத்திற்கு மத்தியிலும் கடந்த ஒரு வாரமாக சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவது கவனிக்கத்தக்கது.
News March 18, 2026
திமுக கூட்டணியில் மோதல் வெடித்தது

திமுக கூட்டணியில் வெளிப்படையாகவே மோதல் வெடித்துள்ளது. கடந்த முறை ஒதுக்கிய தொகுதிகளை விட குறைவான இடங்களை பெற்றுக்கொள்ளுமாறு திமுக தரப்பிலிருந்து தங்களிடம் சொன்னதாகவும், அதை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறிவிட்டதாகவும் CPM மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்தார். அதேபோல், <<19412554>>திருமாவும்<<>> தொகுதிகளை குறைக்க முடியாது என கூறிவிட்டாராம். இதனால், திமுக கூட்டணியில் பெரும் சலசலப்பு எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
News March 18, 2026
அரசியல் தலைவர்கள் மக்களை குழப்புவது நியாயமா?

தவெகவுக்கு டெல்லியிலிருந்து அழைப்பு வந்ததாக <<19412409>>ஆதவ் அர்ஜுனா பேசியது<<>> அரசியல் களத்தில் விவாதமாக மாறியுள்ளது. காரணம், கடந்த ஒரு வாரமாக தவெகவுடன், NDA தரப்பு பேசி வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால், அதனை EPS, நயினார், CTR நிர்மல் குமார் மறுத்திருந்தனர். இப்படி இருக்கையில், ஆதவ் பேசியது பொய்யா? (அ) தலைவர்கள் உண்மையை மறைத்து மக்களை குழப்புவது நியாயமா? என நெட்டிசன்கள் சாடுகின்றனர். உங்கள் கருத்து?


