News August 7, 2025

கடலூர்: சிறுமியிடம் அத்துமீறல்-போக்சோவில் வி.ஏ.ஓ கைது!

image

விருத்தாசலம் அடுத்த கோவிலானூரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (30). இவர் முருகன்குடி வி.ஏ.ஓ.வாக உள்ளார். இந்நிலையில் பாலகிருஷ்ணன் அதே பகுதியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி அத்துமீறியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் நேற்று (ஆக.06) பாலகிருஷ்ணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

Similar News

News March 13, 2026

கடலூர்: பேருந்து நிறுத்தத்தில் கிடந்த சடலம்

image

கடலூர் மஞ்சக்குப்பம் பேருந்து நிறுத்தம் அருகில் நேற்று 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் விரைந்து வந்து, இறந்து கிடந்த முதியவர் யார் என விசாரித்த போது, அவர் கடலூர் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கலைசெல்வம் (56) என்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார், கலைசெல்வம் எப்படி இறந்தார் என தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

News March 13, 2026

கடலூர்: டூவீலர் விபத்தில் இளைஞர் பரிதாப பலி

image

சேத்தியாதோப்பு அடுத்த சாத்தமங்கலத்தை சேர்ந்தவர் வெற்றிவேல் மகன் வினோத் (27). இவர் நேற்று இரவு தனது பைக்கில் சேத்தியாதோப்பு நோக்கி சென்ற போது அவ்வழியாக வந்த டாட்டா ஏஸ் வாகனம் மோதியது. இதில் படுகாயம் அடைந்த வினோத்தை சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!