News August 7, 2025
சென்னையில் மின்தடை அறிவிப்பு

எழும்பூர், மண்ணடி, வால்டாக்ஸ் ரோடு, கொத்தவால்சாவடி, தண்டையார்பேட்டை, GA சாலை, TH சாலை, ரெய்னி மருத்துவமனை, பழைய வண்ணாரப்பேட்டை, நீலாங்கரை, அடையாறு, கஸ்தூரி பாய் நகர், வெட்டுவாங்கணி, கிண்டி, மடிப்பாக்கம், மேடவாக்கம், புழுதிவாக்கம், ஓட்டேரி, ஈஞ்சம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 7) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும். அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்
Similar News
News December 8, 2025
சென்னை: தலைக்கேறிய போதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்!

சென்னை தாம்பரம்- திருவான்மியூர் நோக்கி சென்ற அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர் பயணிகளை தொடர்ந்து தரக்குறைவாக பேசியுள்ளார். ஒருகட்டத்தில் பொறுமையை இழந்த பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின் அரசு பேருந்து ஓட்டுநர் மதுபோதையில் பேருந்தை இயங்கி வருவது தெரியவரவே பயணிகளை அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மதுபோதையில் பேருந்தை ஒட்டியதோடு பயணியாளிடம் வசைபாடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News December 8, 2025
பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டவருக்கு 5 ஆண்டு சிறை

2020ல் கீழ்பாக்கம் பகுதியில் 3 பள்ளி மாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல் நடத்திய 53 வயது நபர் மீது, சிறுமியின் தாயார் புகாரின் பேரில் W-4 கீழ்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையம் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தது. விசாரணை முடிந்து, சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை மற்றும் ரூ.3,000 அபராதம் விதித்தார்.
News December 8, 2025
சென்னையில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கூடிய லேசான முதல் முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24″ செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


