News August 7, 2025
ஆகஸ்ட் 7: வரலாற்றில் இன்று

*1906 – கல்கத்தாவில் முதல் இந்திய தேசியக் கொடி உருவாக்கப்பட்டு பார்சி பகான் சதுக்கத்தில் ஏற்றப்பட்டது. *1955 – சோனி தனது முதலாவது டிரான்சிஸ்டர் வானொலிகளை ஜப்பானில் விற்பனைக்கு விட்டது.. *1941- ரவீந்திரநாத் தாகூர் இறந்த நாள். *1945 – ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்டதை அமெரிக்க அதிபர் ஹேரி ட்ரூமன் அறிவித்தார். *2018- முன்னாள் முதல்வர் கருணாநிதி இறந்த நாள்.
Similar News
News August 9, 2025
அதிமுகவுடன் கூட்டணியில்லை.. பிரேமலதா அறிவிப்பு

<<17341369>>பிரேமலதா – அதிமுக Ex அமைச்சர் KC வீரமணி<<>> இடையேயான சந்திப்பு கூட்டணிக்கு அச்சாரமா என்ற கேள்வியை எழுப்பி இருந்தது. இந்நிலையில், அவரது ஹோட்டலில் தங்கி இருந்ததால் இந்த சந்திப்பு நிகழ்ந்ததாகவும், இதனால் அதிமுகவுடன் கூட்டணி என சொல்ல முடியாது எனவும் பிரேமலதா விளக்கியுள்ளார். 2026 ஜன. 9-ல் கட்சி மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிப்போம் என்றும் அவர் கூறினார்.
News August 9, 2025
கடன் வட்டி தள்ளுபடி.. தமிழக அரசு அறிவிப்பு

வீட்டு வசதி வாரியத்தில் மலிவு விலையில் வீடு வாங்கிய பலரும் தவணை கட்டத் தவறியதால் அபராத வட்டியுடன் சேர்ந்து கடன் சுமை அதிகரித்துள்ளது. அவர்களுக்கான அபாரத வட்டியை தள்ளுபடி செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது 2015 மார்ச் 31-க்கு முன்னர் தவணை காலம் முடிவடைந்த வீட்டுவசதி வாரிய திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும், இந்த சலுகை 2026 மார்ச் 31 வரை அமலில் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
News August 9, 2025
சஞ்சுவை எடுக்க இரு அணிகள் ஆர்வம்

RR-ல் இருந்து தன்னை விடுவிக்குமாறு சஞ்சு சாம்சன் கேட்டுக்கொண்டதாக செய்திகள் வெளியாகின. இதனால் அவர் CSK-வுக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றி பேசிய ஆகாஷ் சோப்ரா, CSK போன்றே KKR-க்கும் ஒரு இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தேவைப்படுவதால், அவர்களும் சஞ்சுவை எடுக்க முன்வரலாம். கடந்த IPL-ல் ₹24 கோடிக்கு ஏலம் எடுத்த வெங்கடேஷ் ஐயரை விடுவித்தால் அவர்களால் சஞ்சுவை எடுக்க முடியும் என்றார்.