News August 7, 2025
75% வருகை கட்டாயம்: CBSE

பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் கட்டாயம் 75% வருகை பதிவேட்டை கொண்டிருப்பது அவசியம் என CBSE தெரிவித்துள்ளது. இந்த வருகை பதிவுகளை கொண்டிருக்காத மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது. மேலும், அவசரநிலை, மெடிக்கல் எமெர்ஜென்ஸி, தேசிய / சர்வதேச போட்டிகளால் பள்ளிக்கு வர இயலாத மாணவர்களுக்கு 25% தளர்வு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
Similar News
News August 7, 2025
ஆசிய கோப்பை அணியில் கில் நீக்கம்? கிரிக்கெட் ரவுண்ட் அப்

*ஆண்டர்சன் – டெண்டுல்கர் தொடரில் சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால், கில், ராகுல், பும்ரா, பண்ட்டுக்கு ஆசிய கோப்பையில் வாய்ப்பளிக்கப்பட மாட்டாது என தகவல். * ஹண்ட்ரட் தொடரில் மான்செஸ்டர் அணியை சதர்ன் ப்ரேவ் அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. *மகளிர் ஹண்ட்ரட் தொடரில் பெண்கள் அணியில் மான்செஸ்டர் அணியை சதர்ன் ப்ரேவ் அணி வென்றது. *துலிப் டிராபி தொடரில் North Zone அணிக்கு கில் கேப்டனாக நியமனம்.
News August 7, 2025
நாடு முழுவதும் UPI சேவை பாதிப்பு

இரவு 7.45 மணிக்கு மேல் Gpay, Phonepe, Paytm செயல்பாடு பாதிக்கப்பட்டுள்ளது. HDFC, SBI, BANK OF BARODA, KOTAK MAHINDRA உள்ளிட்ட முக்கியமான வங்கிகளின் UPI சேவை முடங்கியுள்ளது. இரவு 8.30 மணியளவில் புகார் தெரிவிக்கும் வலைதளத்தில் 2,000-க்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்துள்ளன. அவற்றில் பெரும்பாலும் பணம் செலுத்தும்போது சிக்கல் எழுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்களுக்கும் UPI பிரச்னை உள்ளதா?
News August 7, 2025
நடிகை அழகை புகழ்ந்த ரஜினி: சினிமா ரவுண்ட் அப்

*மாஸ்டரில் ‘ரொம்ப அழகா இருந்தீங்க’னு’ ரஜினி தன்னிடம் தெரிவித்ததாக நடிகை மாளவிகா மோகன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
*மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் மராத்தியில் பேசிய நடிகை கஜோலிடம் ஹிந்தியில் பேசுமாறு கூறியுள்ளனர். அதற்கு கஜோல் மறுத்துவிட்டார்.
*’கிங்டம்’ திரையிடும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க போலீசுக்கு HC உத்தரவு.
*நடிகர் சிவாஜியின் பேரன் தர்ஷன் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார்.